பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் ரெடி..தடபுடலாக நடக்கப்போகும் விழா..இதற்காவது விக்ரம் வருவாரா?
சென்னை : லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள பிரம்மாண்ட பொன்னியின் செல்வன் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக துவங்கி உள்ள நிலையில், படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன்
மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் இரு பாகங்களாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

12 பாடல்கள்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்திலிருந்து மொத்தம் 12 பாடல்கள் உருவாகி உள்ளன. இதில் ஒரு பாடலை இயக்குநர் மணிரத்னமே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக மணிரத்னம் படங்களுக்கு வைரமுத்து பாடல்களை எழுதுவார். ஆனால் முதல் முறையாக பொன்னியின் செல்வன் படத்துக்காக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், வெண்பல கீதையன், கபிலன் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.

பொன்னி நதி
மோஷன் போஸ்டர், கேரக்டர்கள் போஸ்டர், டீசர் ஆகியவற்றை அடுத்தடுத்து வெளியிட்டு ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தீவிரமாக துவக்கி உள்ளது. இந்த படத்தில் இருந்து முதல் பாடலாக பொன்னி நதி வெளியாகி மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பொன்னி நதி பாடலை பாடியுள்ளார்.

செகண்ட் சிங்கிள்
இதையடுத்து படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி செகண்ட் சிங்கிள் பாடல் ஐதராபாத்தில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்வார்கள் என சொல்லப்படுகிறது. இதற்கான பணிகளை தயாரிப்பு நிறுவனமான லைகா தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் கலந்து கொள்வாரா?
டீசர் வெளியீட்டு விழாவின் போது விக்ரம் நெஞ்சுவலி காரணமாக கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, முதல் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. தற்போது ஐதராபாத்தில் நடைபெற உள்ள விழாவில் விக்ரம் கலந்து கொள்வாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications