சோழனுக்காக பறக்கும் ரசிகர்கள் கொடி...சோழா சோழா பாடல் செய்த சாதனை

சென்னை : கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் தயாரிப்பு நிறுவனம் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இறங்கி உள்ளன.

Recommended Video

PS-1 அடுத்த Song Ready | சினிமா செய்திகள் அப்டேட்.. | Live | Filmibeat Tamil

 Ponniyin Selvan second single Chola Chola song makes new record

அதில் முதல் கட்டமாக படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, அடுத்ததாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான பொன்னி நதி பாடலை ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியிட்டனர்.அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.இதைத் தொடர்ந்து பொன்னி நதி பாடல் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு லைக்குகள் மற்றும் பாராட்டை அள்ளினர்.

இந்த நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிளை நேற்று வெளியிட்டனர்.ஃபர்ஸ்ட் சிங்கிள், வந்திய தேவன் ரோலில் நடித்த கார்த்திக்காக தயாரிக்கப்பட்டதை போல், செகண்ட் சிங்கிள் கரிகாலச் சோழனை மையமாகக் கொண்டு சோழா சோழா என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. கரிகால சோழனின் ரோலில் விக்ரம் நடித்துள்ளார்.

இந்த பாடலையும் இளங்கோ கிருஷ்ணனே எழுதியுள்ளார். அதேபோல் சத்ய பிரகாஷ், வி.எம். மகாலிங்கம், நகுல் அபியங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.இந்தப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது.அதில் நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். நடிகர் விக்ரம் சரளமாக தெலுங்கில் பேசி அசத்தினார்.

பொன்னி நதி பாடலைப் போலவே, சோழா சோழா பாடலும் நன்றாக உள்ளதென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவில் இடம்பெறும் காட்சிகள் பிரமிக்கும் வகையில் அமைந்துள்ளன.ஆதித்த கரிகாலனின் ஒட்டுமொத்த கேரக்டரையும் சோழா சோழா பாடல் உள்ளடக்கியிருப்பதாக பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தவர்கள் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் சோழா சோழா வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் யூட்யூப்பில் 5 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. ஆனால் ஜுலை 31 ம் தேதி வெளியிடப்பட்ட பொன்னி நதி பாடல் தற்போது வரை 15 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. சோழா சோழா பாடல் செய்த சாதனையை ரசிகர்களும் படக்குழுவும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், எங்களுக்காக 5 மில்லியன் கொடிகள் பறந்துள்ளது என கேப்ஷன் பதிவிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X