தலைவர் 168 மட்டுமில்ல.. நாம ஆவலா எதிர்பார்த்த ‘அந்த’ பிரமாண்ட படத்தோட படப்பிடிப்பும் தொடங்கிடுச்சு!

மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியுள்ளது.

சென்னை: ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. மணிரத்னத்தின் பெரு முயற்சியால் அந்த எண்ணம் இப்போது நிறைவேறும் சூழ்நிலைக்கு வந்துள்ளது.

ponniyin selvan shoot started with huge budget of Rs.800 cr

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரைப்படமாக எடுக்கிறார் மணிரத்னம். மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து திரையிடப்பட உள்ளது.

இதனால் அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர்.

பொன்னியிள் செல்வனின் முக்கிய கதாபாத்திரமான நந்தினியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவர் ரஜினி படத்தில் நடிப்பதால் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க உள்ளார். இவர்களுடன் பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், ஜெயராம், லால், அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ரூ.800 கோடியை பட்ஜெட்டாக ஒதுக்கி இருக்கிறது லைகா நிறுவனம். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட உள்ள இந்த படத்தின் முக்கிய காட்சிகள் சில தாய்லாந்து காடுகளில் படமாக்கப்பட உள்ளன. இதற்காக அங்கு அரண்மனை செட் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதலில் கார்த்தி, ஜெயம் ரவி நடித்த காட்சிகளை மணிரத்னம் படமாக்கியுள்ளார். தொடர்ந்து 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் பங்கேற்க உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X