கொரோனாவுக்குப் பிறகு.. பொள்ளாச்சியில் தொடங்குகிறது மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்!

By

சென்னை: கொரோனாவுக்குப் பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங், பொள்ளாச்சியில் தொடங்குகிறது.

கல்கியின் புகழ்பெற்ற இந்த நாவலான 'பொன்னியின் செல்வனை' பலர் படமாக்க முயன்றும் முடியவில்லை.

இயக்குனர் மணிரத்னம் இப்போது அதை படமாக்கி வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட பல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் பிரமாண்ட படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில், நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

மந்தாகினி தேவி

மந்தாகினி தேவி

நந்தினியாகவும் மந்தாகினி தேவியாகவும் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா லட்சுமி, பூங்குழலி கேரக்டரில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அடுத்து ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியிலும் புதுச்சேரியிலும் படமாக்கப்பட்டது.

கொரோனா விஸ்வரூபம்

கொரோனா விஸ்வரூபம்

அடுத்தக்கட்ட பட்டப்பிடிப்பு புனேவில் தொடங்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில்தான் கொரோனா விஸ்வரூபம் எடுத்தது. இதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் இதன் ஷூட்டிங் நடத்தப்பட இருப்பதாகக் கூறப்பட்டது.

சார்ட்டட் பிளைட்

சார்ட்டட் பிளைட்

பின்னர் இலங்கையில் ஷூட்டிங் நடத்த இருப்பதாகவும் இதற்காக சார்ட்டட் பிளைட் அனுமதிக்கு படக்குழு காத்திருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த திட்டத்தை பின்னர் படக்குழு மாற்றினர. இந்நிலையில், சினிமா படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்தது.

பணியாற்றக் கூடாது

பணியாற்றக் கூடாது

இருந்தாலும் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் பணியாற்றக் கூடாது என்று நிபந்தனை விதித்ததால் மீண்டும் இதன் ஷூட்டிங் தொடங்குவதில் சிக்கல் உருவானது. இதன் ஷூட்டிங்கில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், உதவியாளர்கள் என்று 400 பேர் வரை பணியாற்ற வேண்டிய நிலை இருப்பதால், அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகலாம் என்று கூறப்பட்டது.

குவியும் மெகா டீம்

குவியும் மெகா டீம்

இந்நிலையில், வருகிற 10-ஆம் தேதி பொள்ளாச்சியில் மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்குகிறது. அங்கு ஷூட்டிங்கை முடித்துவிட்டு மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாதம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்காக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட மெகா டீம் அங்கு குவிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X