மீண்டும் உக்கிரமாகும் கொரோனா... பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ரத்து!

சென்னை: மீண்டும் உக்கிரமடைந்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாக்கப்படுகிறது.

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு நிறுத்தம்

படப்பிடிப்பு நிறுத்தம்

இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. படத்தின் சில காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

படக்குழு திட்டம்

படக்குழு திட்டம்

அதன்பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்நிலையில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.

மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தம்

மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தம்

ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாவது அலை உக்கிரமடைந்துள்ளதால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை படக்குழு ரத்து செய்துள்ளது.

Recommended Video

Ponniyin Selvan cast Candle light Dinner | Jayam Ravi, Trisha, Karthi in Shoot | Hyderabad Shooting
ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா

ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா

இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்ய லட்சுமிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐஸ்வர்ய லட்சுமி வீட்டில் தனிமையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X