மார்ச் 5ஆம் தேதியுடன் முடிகிறது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு? தீபாவளிக்கு வருதுங்றாங்க!
சென்னை: பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மார்ச் 5ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'.
எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து பொன்னியின் செல்வன் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

காலை 8 முதல் இரவு 11 வரை
இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு தொடங்கும் படப்பிடிப்பு இரவு 11 மணிக்குதான் நிறைவடைவதாக கூறப்படுகிறது.

வியந்துப்போன மணிரத்னம்
படப்பிடிப்பு தளத்தில் கார்த்தியின் டெடிகேஷனையும் நடிப்பையும் பார்த்து இயக்குநர் மணிரத்னம் ஆச்சரியப்பட்டதாக தகவல் வெளியானது. ஏற்கனவே கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தில் நடித்திருந்தார்.

ஐஸ்வர்யா ராய் டபுள் ஆக்ஷன்
இதனிடையே இந்தப் படத்தில் விக்ரம் சோழ மன்னர் ஆதித்ய கரிகாலனாக நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு ரோல் சரத்குமாருக்கு ஜோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 5ஆம் தேதியுடன்
இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 5 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸ்?
இந்தப் படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. பொன்னியின் செல்வன் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











