தீபாவளி பர்சேஸிங்கில் சூடு பறக்கும் விற்பனை.. பெண்களை கவர்ந்த பொன்னியின் செல்வன் பட்டுச்சேலைகள்!

சென்னை: பொன்னியின் செல்வன் படம் ஒரு பக்கம் 300 கோடியை கடந்து 400 கோடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால், பொன்னியின் செல்வன் சேலைகளின் விற்பனை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தை எம்ஜிஆர், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் எடுக்க முயன்று முடியாமல் போன நிலையில், இயக்குநர் மணிரத்னம் அந்த முயற்சியில் வெற்றிப் பெற்றுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் இப்படியொரு இதிகாச படம் எப்படி உருவாகப் போகுது என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் மிகப்பெரிய வசூல் வேட்டையை பொன்னியின் செல்வன் நடத்தி உள்ளது.

300 கோடி

300 கோடி

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் 7 நாட்களில் 300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படம் வெளியான பிறகும் ஆதித்த கரிகாலன் பெயரை மாற்றிக் கொள்ளாமல் இருக்கும் சியான் விக்ரம் தனது சந்தோஷத்தை அந்த ட்வீட்டை ஷேர் செய்து வெளிப்படுத்தி உள்ளார்.

வயதானவர்கள் வாழ்த்து

வயதானவர்கள் வாழ்த்து

இதுவரை தியேட்டருக்கே வராத வயதானவர்கள் எல்லாம், பொன்னியின் செல்வன் படத்தை இளமை காலத்தில் படித்த நிலையில், திரையில் படமாக வந்திருப்பதை பார்க்க ஆர்வமாக தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். இயக்குநர் மணிரத்னம் எந்தவொரு ஆபாசமும் இல்லாமல் இப்படியொரு படத்தை எடுத்துள்ளார் என்றும் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட அனைவரது நடிப்பும் அசத்தல் என்றும் பாராட்டி உள்ளனர்.

பொன்னியின் செல்வன் சேலை

பொன்னியின் செல்வன் சேலை

இந்நிலையில், பொன்னியின் செல்வன் நடிகர்கள் உருவங்கள் அச்சிடப்பட்ட பட்டுப்புடவைகள் மார்க்கெட்டில் படு ஜோராக விற்பனை ஆகி வருகிறது. ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினரின் புகைப்படங்கள் அந்த சேலையில் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், பொன்னியின் செல்வன் பெயரும் அந்த சேலையில் பிரின்ட் ஆகி பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

என்ன விலை

என்ன விலை

பொன்னியின் செல்வன் பட்டுச்சேலையாக இருக்கே விலை 5000 ரூபாய், 10000 ரூபாய் இருக்குமோ என அஞ்ச வேண்டாம். இதன் விலை வெறும் 2100 ரூபாய் மட்டுமே என்பதால், பெண்கள் விருப்பப்பட்டு பொன்னியின் செல்வன் சேலையை பெண்கள் தீபாவளியை முன்னிட்டு வாங்கி செல்வதாக கடைக்காரர்கள் தெரிவித்து உள்ளனர்.

96 சுடிதார்

96 சுடிதார்

கடைசியாக 96 படத்தில் ஜானுவாக நடித்த த்ரிஷா போட்டிருந்த அதே மஞ்சக் கலரு சுடிதார் வேண்டும் என ஏகப்பட்ட பெண்கள் கடைவீதிகளை முற்றுகையிட, 96 பட டிசைன் சுடிதார் செம அட்டகாசமாக விற்பனையானது. குந்தவை த்ரிஷாவின் உடை, ஐஸ்வர்யா ராயின் காஸ்ட்யூம் எல்லாம் படத்தை பார்த்தவர்களின் கண்களை விட்டு அகலவே இல்லாத நிலையில், அந்த சேலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

ரஜினி படங்கள் வந்தால்

ரஜினி படங்கள் வந்தால்

ரஜினியின் ஜெயிலர் பட அறிவிப்பு வந்ததுமே விநாயகர் சிலை கூட ஜெயிலர் சிலையாக மாறியது. தீபாவளி பட்டாசுகள், கேக் என ரஜினி படங்கள் வந்தால் எப்படி வரவேற்பு இருக்குமோ? அதே அளவுக்கு பொன்னியின் செல்வன் சேலைகளுக்கு வரவேற்பு இருப்பது கோலிவுட்டையே வியக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X