ப்பா.. பட்டு வேட்டியில் ஜெயம் ரவி.. பட்டுச் சேலையில் ஆர்த்தி.. காதலர் தினத்தில் மனைவியுடன் செம போஸ்!
சென்னை: பொன்னியின் செல்வன் 2, இறைவன், அகிலன் என கைவசம் 3 படங்களின் ரிலீஸை வைத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி காதலர் தினத்தன்று தனது மனைவி ஆர்த்தி உடன் ரொமான்ஸ் செய்யும் அழகிய புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி தொடர்ந்து ஏகப்பட்ட ஹிட் படங்களை இத்தனை ஆண்டுகளாக கொடுத்து ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி வசூலை வசூல் செய்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

எல்லாமே ஜெயம் தான்
நடிகர் ஜெயம் ரவி 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக நடித்து வருகிறார். இத்தனை ஆண்டுகளில் அவர் நடிப்பில் வெளியான தோல்வி படங்கள் என்றால் ரொம்பவே குறைவு என்று தான் சொல்ல முடியும். அந்தளவுக்கு எல்லாமே ஜெயமாகவே அவருக்கு இதுவரை அமைந்து வருவது குறிப்பிடத்தக்கது. நல்ல கதைகளை தேர்வு செய்து சிறந்த நடிப்பை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வரும் நல்ல நடிகர் ஜெயம் ரவி.

தனி ஒருவன்
அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் பல தெலுங்கு படங்களை ரீமேக் செய்து நடித்து ஹிட் கொடுத்து வந்த ஜெயம் ரவிக்கு மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் மாஸ் ஹீரோ அந்தஸ்த்தை வாரி வழங்கியது. தனி ஒருவன் 2 படம் விரைவில் உருவாக வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

அருள்மொழி வர்மன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் படங்களே இன்னமும் 500 கோடி வசூலை நெருங்க முடியாத நிலையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி வசூலை கடந்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. பொன்னியின் செல்வன் என்கிற டைட்டில் ரோலிலேயே ஜெயம் ரவி தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1000 கோடி வசூல் வருமா
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பாகமே 500 கோடி வசூல் ஈட்டிய நிலையில், இரண்டாம் பாகம் 1000 கோடி வசூலை தட்டித் தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் சாத்தியமானால், தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி படமாக மாறும்.

இறைவன்
மனிதன், என்றென்றும் புன்னகை படங்களை இயக்கிய இயக்குநர் அகமது இயக்கத்தில் உருவாகி வரும் இறைவன் படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்த படத்தில் நரைத்த தாடி லுக்கில் நடித்து வருகிறாரா ஜெயம் ரவி என்கிற டவுட் சமீப காலமாக நரைத்த முடியுடன் ஜெயம் ரவி காட்சியளிப்பதால் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

மனைவி ஆர்த்தியுடன்
கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்து கொண்ட ஜெயம் ரவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு கல்யாண நாள் போல பட்டு வேட்டி, பட்டுச் சேலையில் கணவனும் மனைவியும் கொடுத்த ரொமான்ஸ் போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜெயம் ரவியின் இந்த லேட்டஸ்ட் குடும்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் ஜெயம் ரவியை வாழ்த்தி வருகின்றனர். இளம் பெண்கள் எல்லாரும் என்னோட கிரஷ்ஷுக்கு இனிய காதலர் தினம் என கமெண்ட் போட்டு இன்னமும் ஜெயம் ரவியை சைட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











