ரஜினியின் லால் சலாம் பூஜையில் பொன்னியின் செல்வன் வெற்றி விழா… ஆஜரான சோழர் படை…
சென்னை: லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் பட பூஜை இன்று நடைபெற்றது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், லால் சலாம் பூஜையில் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழாவும் நடைபெற்றது.

சூப்பர் ஸ்டாரின் லால் சலாம்
ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு பூஜையுடன் தொடங்கியது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள இந்தப் படத்திற்கு லால் சலாம் என டைட்டில் உறுதியாகியுள்ளது. ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்க, விஷ்ணு விஷால் விக்ராந்த் இருவரும் லீட் ரோலில் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தப் படத்தில் ரஜினியின் கேரக்டர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக காணப்படுகிறது.

பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்
இந்நிலையில், லால் சலாம் படத்தின் பூஜை விழாவில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் சக்ஸஸ் மீட்டிங்கும் சிறப்பாக நடைபெற்றது. இதில், மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பங்கேற்றனர். முக்கியமாக விக்ரம், திரிஷா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. லைகா தயாரிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடிக்கும் அதிகம் என சொல்லப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸில் சாதனை
செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. மேலும், தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி, ஓடிடி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வரை வசூலித்துள்ள பொன்னியின் செல்வன், தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, அமெரிக்காவில் இதுவரை ரஜினியின் 2.O படம் தான் வசூலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், தற்போது அந்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் பாகம் வெளியான நிலையில், இரண்டாவது பாகம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது.

விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரஜினியின் லால் சலாம் படத்தின் பூஜையோடு பொன்னியின் செல்வன் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டுள்ளது முக்கியமானது. பொன்னியின் செல்வன் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இப்போது அவரின் 170வது பட பூஜையில் பொன்னியின் செல்வன் வெற்றிவிழா கொண்டாடப்படுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், விரைவில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











