தலைவர் 170 பட பூஜையில் பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்… லைகாவின் டபுள் ட்ரீட்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்தப் படங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 5ம் தேதி பூஜையுடன் வெளியாகிறது.

இந்நிலையில், ரஜினியின் தலைவர் 170 பட பூஜையுடன் பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸையும் லைகா நிறுவனம் கொண்டாடவுள்ளதாக சொல்லப்படுகிறது.

லைகாவுடன் சூப்பர் ஸ்டார்

லைகாவுடன் சூப்பர் ஸ்டார்

'ஜெயிலர்' படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்து இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். லைகா தயாரிக்கும் இந்தப் படங்களுக்கான அறிவிப்பு வரும் 5ம் தேதி பிரம்மாண்டமான பூஜையுடன் அறிவிக்கப்படவுள்ளது. ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அவருடன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், லைகா தயாரிக்கும் ரஜினியின் படங்களுக்கான இயக்குநர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

நவம்பர் 5ம் தேதி டபுள் ட்ரீட்

நவம்பர் 5ம் தேதி டபுள் ட்ரீட்

தலைவர் 170, தலைவர் 171 ஆகிய இந்த இரண்டு படங்களில், ஒரு படத்தின் பூஜை நவம்பர் 5ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அப்போது படத்தின் இயக்குநர் யார் என அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல் தலைவர் 171 படத்தின் பூஜை அல்லது அதன் இயக்குநர் குறித்தும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறாது. இந்நிலையில், தலைவர் 170 பட பூஜைக்காக லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரவுள்ளார். அதனால், அதனுடன் சேர்ந்து பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்டையும் நடத்த லைகா முடிவு செய்துள்ளதாம்.

பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்

பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்

செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வரை வசூலித்துள்ள பொன்னியின் செல்வன், நாளை ஓடிடியிலும் வெளியாகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் மட்டும் வெளியான நிலையில், இரண்டாவது பாகம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் வெற்றி பெற்றதை அடுத்து, படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு மணிரத்னம் விருந்து கொடுத்திருந்தார்.

லைகாவின் விருந்து

லைகாவின் விருந்து

இப்போது அதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு லைகா நிறுவனமும் சூப்பரான ட்ரீட் கொடுக்கவுள்ளதாம். இந்த விருந்து தலைவர் 170 பட பூஜையோடு, பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்டாக நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நவம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ள ரஜினியின் தலைவர் 170 பட பூஜை, பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா ரசிகர்களையே அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ள இந்த விழா குறித்து சீக்கிரமே அதிகாராப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X