‘’அவளை மறக்கத்தான்..என்னை மறக்கத்தான்’’..பொன்னியின் செல்வன் டீசர் எப்படி இருக்கு ?

சென்னை : காலத்தால் அழியாத காவியமான பொன்னியின் செல்வன் டீசர் வெளியாகி உள்ளது. கற்பனை ஓடத்தில் நம்மை மிதக்கவிட்ட பொன்னியின் செல்வன் டீசர் எப்படி இருக்கு என்பதை கற்பனை குதிரையை தட்டிவிட்டு பார்க்கலாம்.

Recommended Video

வெளியானது Ponniyin Selvan Part 1 Teaser... கொண்டாடத்தில் ரசிகர்கள்

"பொன்னியின் செல்வன்" இந்த நாவலை யாருக்குத்தான் பிடிக்காது. எத்தனை முறை படித்தாலும் அதே விறுவிறுப்பு.. அதே வியப்பு என பக்கத்திற்கு பக்கம் சுவாரசியம் கூடிக்கொண்டே போகும். அமரர் கல்கியின் படைப்பில் தனித்துவமான ஓர் படைப்பு.

கல்கி இதழில் பொன்னியின் செல்வன் தொடராக வந்த போதும், அதுவே பின்னர் நூலாக வந்தபோதும் பெரும் வாசகர்களை பெற்றது. எம்.ஜி.ஆர்,கமல் அவர்களின் கனவு இன்று இயக்குநர் மணிரத்தினத்தால் நிறைவேறியுள்ளது

டீசர் எப்படி இருக்கு

டீசர் எப்படி இருக்கு

தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,இந்தி என 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் டீசர் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 6.30 மணிக்கு டீசர் வெளியானது. இதில், தமிழ் டீசரை சூர்யா வெளியிட்டார்.தெலுங்கு டீசரை மகேஷ்பாபுவும், இந்தி டீசரை அமிதாப்பச்சனும் வெளியிட உள்ளனர்.

சீறிப்பாய்ந்து வரும் குதிரை

சீறிப்பாய்ந்து வரும் குதிரை

பொன்னியின் செல்வன் தமிழ் டீசர் சற்று முன் வெளியாகி ரகிகர்களின் ஆவலை தூண்டி உள்ளது. டீசரின் ஆரம்பத்தில் விரியத் தொடங்கிய கண், டீசர் முடியும் போது அவ்வளவுதானா.. முடிந்து விட்டதா என ஏக்கப்பெருமூச்சுவிட வைத்துள்ளது. தண்ணீரை பிளந்து வரும் கப்பல்கள், சீறிப்பாய்ந்து வரும் குதிரை, கோட்டையை முட்டி மோதும் யானைக்கூட்டம் என காட்சிக்கு காட்சி மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அவளை மறக்கத்தான்

அவளை மறக்கத்தான்

விக்ரமின் வெற்றிவேல் கர்ஜனையும், குதிரையின் அலறலும், ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் ஒரு நொடி மெய்மறக்க வைத்து விட்டது. ஆதித்ய கரிகாலன் விக்ரமின் சிம்மக்குரலில் இந்த கள்ளும், இந்த பாட்டும், ரத்தமும் போர்களமும் எல்லாமே அதை மறக்கத்தான்.. அவளை மறக்கத்தான்.. என்னை மறக்கத்தான் என அடிவயிற்றிலிருந்து கர்ஜித்துள்ளார். இத்தனை நாளாக.. இத்தனை ஆண்டுகாலமாக இந்த படத்திற்காக காத்துக்கொண்டு இருந்ததில் தவறில்லை என்பதை உணர்த்தி உள்ளது இந்த டீசர்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி,பார்த்திபன், ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கதாபாத்திர போஸ்டர்

கதாபாத்திர போஸ்டர்

இப்படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியதேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவையாக த்ரிஷாவும் , அருண்மொழி வர்மனாக ஜெயம்ரவியும் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X