“பொன்னியின் செல்வன்“தமிழ் டீசரை வெளியிடுவது யார்?.. சற்று முன் வெளியான தகவல் !

சென்னை : இயக்குநர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக போகிறது.

Recommended Video

Ponniyin Selvan, உலகமே வியந்து பார்க்கும் அருள் மொழி வர்மன்

தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் தமிழ் டீசரை யார் வெளியிடப்போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் சற்று முன் இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடித்து கிராபிக்ஸ், பின்னணி இசைகோர்ப்பு உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகளை நடைபெற்று வருகின்றன.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

அமரர் கல்கியின் வரலாற்று சிறப்பு மிக்க நாவலான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் உருவாகி உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் இக்கதையைப் படமாக எடுக்க முயற்சித்தார். ஆனால் அவர்களின் ஆசை நிறைவேறவில்லை. தற்போது மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா, பிரபு, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார் என ஏராளமான நட்சத்திரபட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 4 ஆண்டுகளான பாண்டிச்சேரி, ஹைதராபாத், கோட்டை நகரான குவாலியரில் நடந்து முடிந்துள்ளது.

அடுத்தடுத்து அப்டேட்

அடுத்தடுத்து அப்டேட்

பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு இப்போதே தொடங்கி விட்டது. அதன்படி படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா ஆகியோரின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

டீசர் வெளியீடு

டீசர் வெளியீடு

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நாளை 6 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது. இதில் பொன்னியின் செல்வன் தமிழ் டீசரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் இந்தி ரீசரை அமிதாப் பச்சனும், மலையாளம் ரீசரை மோகன்லாலும், தெலுங்கு டீசரை மகேஷ்பாபு, கன்னடம் டீசரை ரக்ஷித் ஷெட்டியும் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X