பிரமோஷனைத் துவங்கிய பொன்னியின் செல்வன் டீம்.. கலக்கலான புகைப்படங்களை பார்க்கலாங்களா!

சென்னை : தமிழ் சினிமாவின் பெருமைமிகு இயக்குநர் மணிரத்னத்தின் கனவு பிராஜெக்டாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். இந்தப் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

படத்தின் ட்ரெயிலர் மற்றும் டீசர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், படத்தின் பிரமோஷனையும் படக்குழு துவங்கவுள்ளது.

இந்தப் படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் படத்தில் தங்களது கேரக்டர் பெயர்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பிரம்மாண்ட படங்கள் தமிழில் குறைவு என்ற குறை இருந்த நிலையில், அந்தக் குறையை போக்கும் வகையில் மணிரத்னத்தின் அதீதமான முயற்சியில் பொன்னியின் செல்வன் படம் உருவாகியுள்ளது.

இரண்டு பாகங்கள்

இரண்டு பாகங்கள்

இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை 150 நாட்களில் மணிரத்னம் முடித்ததாக படத்தின் இசை வெளியீட்டின்போது ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதுபோன்ற பிரம்மாண்டமான தயாரிப்பை எப்படி அவ்வளவு குறுகிய காலத்தில் மணிரத்னம் முடித்தார் என்பது குறித்த வியப்பை இந்தத் தகவல் ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் பிரமோஷன்கள்

படத்தின் பிரமோஷன்கள்

வரும் 30ம் தேதி படத்தின் முதல் பாகம் சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது. படத்தின் பிரம்மாண்டம் டீசர், ட்ரெயிலர் மட்டுமின்றி பாடல்களிலும் சறிப்பாக வெளிப்பட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், படத்தின் பிரமோஷனை தற்போது படக்குழு துவக்கியுள்ளது.

பிரமோஷன் டூர்

பிரமோஷன் டூர்

பிரமோஷன் டூர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக இதுகுறித்து நடிகர் விக்ரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், கார்த்தி, ஜெயம்ரவி பொன்னியின் செல்வன் கேரக்டர்களாகவே மாறி அதற்கு பதிலளித்தது ரசிகர்களை கவர்ந்தது.

சென்னை டூ துபாய்

சென்னை டூ துபாய்

இந்நிலையில் விரைவில் சென்னையில் துவங்கவுள்ள இந்த டூர், சென்னை, தஞ்சாவூர், கேரளா, பெங்களூரு, டெல்லியில் நடக்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து துபாயில் இந்த டூர் நிறைவடையவுள்ளது. முன்னதாக படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

பிரம்மாண்டமாக நடந்த இசை வெளியீடு

பிரம்மாண்டமாக நடந்த இசை வெளியீடு

இதை தொடர்ந்து படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிகவும் சிறப்பாகவே நடைபெற்றது. தற்போது இந்தப் படத்தின் பிரமோஷனல் டூர் நடைபெறவுள்ள நைலயில், இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

படத்தின் ஸ்டில்ஸ்

படத்தின் ஸ்டில்ஸ்

இதற்கிடையில் படத்தின் புதிய போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அதிகமாக ஜெயம்ரவி ஏற்று நடித்துள்ள அருண்மொழி கேரக்டருக்கான போஸ்டர்களே காணப்படுகின்றன. இதனிடையே படத்தின் டிஜிட்டல் உள்ளிட்ட உரிமைகளும் அதிக விலைக்கு விற்றுத் தீர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தப் படம் மற்றும் அதன் அப்டேட்கள் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X