ஐதராபாத் செல்லும் பொன்னியின் செல்வன் படக்குழு.. இன்னைக்கு பிரமோஷன் அங்க தான்!

ஐதராபாத் : பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர்கள் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டவர்கள் தற்போது பிரமோஷனல் டூரில் ஈடுபட்டுள்ளனர்

சென்னையில் துவங்கிய இந்த பிரமோஷனல் டூர், கேரளா, பெங்களூருவை தொடர்ந்து இன்றைய தினம் ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான தனி விமானத்தில் படக்குழுவினர் தங்களது பயணங்களை நடத்திவரும் சூழலில் தற்போது படக்குழுவினரின் செல்பி வெளியாகியுள்ளது.

சிறப்பான பிரமோஷன்கள்

சிறப்பான பிரமோஷன்கள்

நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் அடுத்த வாரம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பான பிரமோஷன்கள்

சிறப்பான பிரமோஷன்கள்

இந்தப் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். படத்தின் அடுத்தடுத்த இசை வெளியீடு, ட்ரெயிலர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளன. இதனிடையே படத்தில் அடுத்தடுத்த பாடல்கள், ப்ரமோக்களையும் படக்குழு வெளியிட்டு வருகிறது.

பிரமோஷனல் டூர்

பிரமோஷனல் டூர்

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பிரமோஷனல் டூர் சென்னையில் துவங்கிய நிலையில், திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, துபாய் என இதன் பயணம் நீளவுள்ளது. இதில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர்.

செல்ஃபி எடுத்த படக்குழு

செல்ஃபி எடுத்த படக்குழு

சென்னையை தொடர்ந்து கேரளாவில் பிரமோஷனை மேற்கொண்ட இந்த டீம், இன்றைய தினம் ஐதராபாத்தில் பிரமோஷனை மேற்கொள்ளவுள்ளது. தனி விமானத்தில் படக்குழுவினர் இந்த டூரை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் விமானத்தில் எடுத்துக் கொண்ட செல்ஃபியை தற்போது வெளியிட்டுள்ளனர்.

பாண்டியர்கள் அறிமுகம்

பாண்டியர்கள் அறிமுகம்

படம் வெளியாக இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது பொன்னியின் செல்வன். இந்தப் படத்தின் அடுத்தடுத்தப் பாடல்ள், ப்ரமோ ஆகியவை வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகின்றன. நேற்றைய தினம் வெளியான ப்ரமோவில் பாண்டியர்கள் அறிமுகம் காட்டப்பட்டன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X