அனுமதித்தால் புதுச்சேரி..இல்லையெனில் ஏவிஎம்.. பொன்னியின் செல்வன் முதல் பார்ட் ரிலீஸ் எப்போது?

By

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

Recommended Video

Master & Cobra Release Date • Exclusive Update | Thalapathy Vijay Vikram

கல்கியின் புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வனை' சினிமாவாக்கி வருகிறார் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட பல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

 ஆதித்த கரிகாலன்

ஆதித்த கரிகாலன்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் ஐஸ்வர்யா ராய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நந்தினியாகவும் மந்தாகினி தேவியாகவும் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, பூங்குழலி கேரக்டரில் நடிக்கிறார். சுந்தரச் சோழனாக சரத்குமாரும் ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும் நடிக்கின்றனர்.

 தாய்லாந்தில்

தாய்லாந்தில்

சின்ன பழுவேட்டைரையராக ரகுமான், ஆதித்த கரிகாலனாக விக்ரம் வந்தியத்தேவனாக கார்த்தி குந்தவையாக, த்ரிஷா, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.

 ராமோஜிராவ் பிலிம்சிட்டி

ராமோஜிராவ் பிலிம்சிட்டி

அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. அங்கு ஜெயம் ரவியின் ஓபனிங் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. அங்கு ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

கொரோனா

கொரோனா

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் லாக்டவுன் முடிந்து ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அப்போது, அரசு அனுமதி கொடுத்தால் படப்பிடிப்பை புதுச்சேரியில் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. இல்லை என்றால் ஏவி.எம்-மில் செட் அமைத்து படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனர்.

 நிர்வாகத் தயாரிப்பாளர்

நிர்வாகத் தயாரிப்பாளர்

இதில் ஐஸ்வர்யா ராய் -விக்ரம் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தை அடுத்த வருடம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளனர். இதை மெட்ராஸ் டாக்கீஸின் நிர்வாகத் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் அளித்துள்ள பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.

 ஒருங்கிணைப்பது

ஒருங்கிணைப்பது

அவர் கூறும்போது, தொடங்க இருக்கும் ஷெட்யூலில், முதல் பாகத்தின் காட்சிகளை ஒரே மூச்சில் படமாக்க இருக்கிறோம். மற்றவர்களை போலவே ஷூட்டிங் தொடங்கும் தினத்தை நாங்கள் ஆவலாக எதிர்பார்த் திருக்கிறோம். நடிகர், நடிகைகளின் கால்ஷீட்டை ஒருங்கிணைப்பது கஷ்டம்தான். இருந்தாலும் அதற்கான வேலைகளில் ஈடுபடுவோம்.

 அடுத்த வருடம்

அடுத்த வருடம்

போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு அதிக நாட்கள் தேவை என்பது உண்மைதான். இருந்தாலும் குவாலிட்டியில் சமரசம் செய்துகொள்ளமாட்டோம். முதல் பாகத்தை அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். ஆனால், ரிலீஸ் தேதி எங்கள் கையில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X