Ponniyin selvan re-release :ரீ -ரிலீசாகும் பொன்னியின் செல்வன் 1.. அட இது நல்லா இருக்கே!

சென்னை : கடந்த ஆண்டில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்துள்ள படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது.

நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இந்தப் படம் வெளியானது.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் இந்த மாதத்தின் இறுதியில் வெளியாகவுள்ளது.

Ponniyin selvan team planned to release Part 1 with selected theatres with Part 2

பொன்னியின் செல்வன் படம் : நடிகர்கள் கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச அளவில் வெளியானது பொன்னியின் செல்வன் படம். வரலாற்றுப் படமாக இரண்டு பாகங்களில் உருவாகியுள்ள இந்தப் படம் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமாக உருவாகியிருந்தது. இந்தப் படத்தின்மீதான அவரது விருப்பம் ஒவ்வொரு பிரேமிலும் வெளிப்பட்டது. இந்தப் படத்தில் ஒவ்வொரு கேரக்டர்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

அந்தவகையில் கார்த்தி -த்ரிஷா காம்பினேஷன் காட்சிகள், த்ரிஷாவின் அழுத்தமான நடிப்பு, ஐஸ்வர்யாவின் மௌனமான வில்லத்தனம், பார்த்திபனின் ஆளுமை, சரத்குமாரின் அப்பாவித்தனம் என அனைத்து கேரக்டர்களுக்கும் சிறப்பான களம் அமைந்திருந்தது. அனைவரும் அவரது கேரக்டர்களின் போக்கை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் படைப்பு படிக்கும்போதே அந்தக் கேரக்டர்களாக நம்மை உணர வைத்தது. ஒவ்வொரு கேரக்டர்களும் எப்படி இருந்திருப்பார்கள் என்று படித்தவர்களை கனவுலகத்திற்கு கொண்டு சென்றவை.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படம், அந்தக் கேரக்டர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்ற கற்பனையை ரசிகர்களுக்கு கடத்தியது. அந்த வகையில் சில விமர்சனங்களை சந்தித்த போதிலும், பொன்னியின் செல்வன் படைப்பை சிறப்பாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளார் மணிரத்னம். இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் தற்போது உருவாகியுள்ள நிலையில், வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்கான பிரமோஷன்களை தற்போது படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.

Ponniyin selvan team planned to release Part 1 with selected theatres with Part 2

பொன்னியின் செல்வன் இசை வெளியீடு : சமீபத்தில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் பிரம்மாண்டமான வகையில் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் இந்த இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். சமூக வலைதளங்களின் மூலமாகவும் சிறப்பான பிரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். கார்த்தி உள்ளிட்ட படத்தின் முக்கியமான கேரக்டர்களின் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோக்களும் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்தன. அகநக பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டன.

பொன்னியின் செல்வன் 2 படம் இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள நிலையில், முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை சில குறிப்பிட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வரும் 21ம் தேதி படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டாவது பாகத்துடன் முதல் பாகத்தையும் வெளியிடலாம் என்ற தனது கோரிக்கையை அடுத்து மணிரத்னம் இந்த முடிவை எடுத்துள்ளதாக நடிகர் பார்த்திபன் தகவல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X