நாளை விக்ரம் ஸ்பெஷல்...சஸ்பென்ஸ் வைக்கும் பொன்னியின் செல்வன் டீம்...அப்படி என்ன வெளியிட போறாங்க?
சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.
Recommended Video
பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் நடித்துள்ள முக்கிய கேரக்டர்களின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் டீசர் ஜுலை 8 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டீசர் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழில் இந்த டீசர் 30 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ்
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் ரோலில் விக்ரம், வந்தியத்தேவன் ரோலில் கார்த்தி,நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய், குந்தவை ரோலில் த்ரிஷா, அருள்மொழி வர்மன் ரோலில் ஜெயம் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டீசர் வெளியீட்டு விழாவில் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

விழாவை மிஸ் செய்த விக்ரம்
உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் விக்ரம் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இந்த விழாவில் விக்ரம் கலந்து கொள்வார் என ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் கலந்து கொள்ளாதது அனைவருக்கும் ஏமாற்றம் அளித்தது.

கோப்ரா விழாவில் மட்டும் பங்கேற்பு
அதே சமயம், விக்ரம் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதால் நேற்று நடைபெற்ற கோப்ரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அவர் பற்றி பல வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில் ஆரோக்கியமாக வந்து விழாவில் கலந்து கொண்ட விக்ரம், தன்னை பற்றி பரவிய ஹார்ட் அட்டாக் வதந்திகள் பற்றி நக்கசல் செய்து மேடையில் பேசியது ரசிகர்களை கவர்ந்தது.

நாளை விக்ரம் ஸ்பெஷல்
இந்நிலையில் பொன்னியின் செல்வன் டீசர் விழாவில், ஆதித்ய கரிகால சோழனை ரசிகர்கள் மிஸ் செய்ததால் நாளை மாலை 5 மணிக்கு விக்ரம் ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக பொன்னியின் செல்வன் டீம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அப்படி என்ன வெளியிட போகிறார்கள்
இது ரசிகர்களை சந்தோசமடைய வைத்திருந்தாலும், அப்படி என்ன அறிவிப்பு வெளியிட போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விக்ரமிற்காக ஸ்பெஷல் க்ளிம்ப்ஸ் ஏதாவது வெளியிட போகிறார்களா. அல்லது ஆதித்ய கரிகாலன் பற்றிய பாடல், போஸ்டர், தனி டீசர் ஏதாவது வெளியிட போகிறார்களா. என்ன ஸ்பெஷல் வெளியிட போகிறார்கள் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











