புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பொன்னியின் செல்வன் நாயகர்கள்!
சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் இரு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது.
முதல் பாகம் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
சூட்டிங்கின் இடையில் விக்ரம் உள்ளிட்டவர்கள் புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளனர். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் படம்
தமிழ் எழுத்தாளர் கல்வி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக மணிரத்னம் இயக்கி வருகிறார். இதில் விக்ரம், விக்ரம் பிரபு, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டில் முதல் பாகம் ரிலீஸ்
அடுத்த ஆண்டில் முதல் பாகம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் இந்தப் படத்தை லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

டப்பிங் பணிகள் தீவிரம்
பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, மைசூர் உள்ளிட்ட இடங்களில் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, படத்தின் நாயகர்கள் இணைந்து புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளனர்.

புகைப்படத்திற்கு போஸ்
இந்தப் புகைப்படத்தை படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் ரவிவர்மன் மற்றும் விக்ரம், கார்த்தி, ரஹ்மான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் உடற்பயிற்சிக்கு இடையில் இந்த புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர்.

சிறப்பான பொன்னியின் செல்வன்
மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது பொன்னியின் செல்வன் படம். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல், புத்தக விரும்பிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்துள்ள நிலையில், படத்தில் அந்த அனுபவம் கிட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











