சோழ தேசத்து வேங்கை வந்தாச்சு...5 மொழிகளில் டப்பிங்கில் கர்ஜித்த விக்ரம்

சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.

பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் நடித்துள்ள முக்கிய கேரக்டர்களின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் டீசர் ஜுலை 8 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டீசர் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழில் இந்த டீசர் 30 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ்

பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ்

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் ரோலில் விக்ரம், வந்தியத்தேவன் ரோலில் கார்த்தி,நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய், குந்தவை ரோலில் த்ரிஷா, அருள்மொழி வர்மன் ரோலில் ஜெயம் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டீசர் வெளியீட்டு விழாவில் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

 விழாவை மிஸ் செய்த விக்ரம்

விழாவை மிஸ் செய்த விக்ரம்

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் விக்ரம் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இந்த விழாவில் விக்ரம் கலந்து கொள்வார் என ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் கலந்து கொள்ளாதது அனைவருக்கும் ஏமாற்றம் அளித்தது.

விக்ரம் ஸ்பெஷல்

விக்ரம் ஸ்பெஷல்

பொன்னியின் செல்வன் டீசர் விழாவில், ஆதித்ய கரிகால சோழனை ரசிகர்கள் மிஸ் செய்ததால் நாளை மாலை 5 மணிக்கு விக்ரம் ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக பொன்னியின் செல்வன் டீம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால் அப்படி என்ன வெளியிட போகிறார்கள். பாடலா, விக்ரமிற்காக தனி டீசரா, க்ளிம்ப்சா, போஸ்டரா என குழம்பி போயினர்.

கர்ஜித்த சோழ தேசத்து வேங்கை

கர்ஜித்த சோழ தேசத்து வேங்கை

இந்நிலையில் இன்று, எங்கள் சோழ தேசத்து வேங்கையின் கர்ஜனை...5 மொழிகளில் என்ற கேப்ஷனுடன் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்காக 5 மொழிகளில் விக்ரம் டப்பிங் பேசிய வீடியோ மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு வரி தமிழில், அடுத்த வரி தெலுங்கில் என விக்ரமின் டப்பிங் வீடியோ, புலியை போல் உருமுவது ஆகியன ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

 என்ன டயலாக் டப்பிங் பேசினார்

என்ன டயலாக் டப்பிங் பேசினார்

ஏற்கனவே வெளியிடப்பட்ட பொன்னியின் செல்வன் டீசரின் இறுதியில், விக்ரம் பேசும் ஒரே ஒரு டயலாக் மட்டும் இடம்பெற்றிருக்கும். இந்த கல், ரத்தம், போர், பகை எல்லாமே அதை மறக்கத்தான். அவளை மறக்கத்தான், என்னை மறக்கத்தான் என பேசி கத்துவார். இந்த டயலாக் டப்பிங் பேசும் வீடியோ தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X