பழிவாங்கும் அழகிய முகம்...பொன்னியின் செல்வன் நந்தினியாக ஐஸ்வர்யா ராய்

சென்னை : டைரக்டர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி உள்ளது பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் படமாக்கி முடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் ஜுலை முதல் வாரத்தில் வெளியாகும், தஞ்சையில் டீசர் ரிலீஸ் விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டீசர் ரிலீஸ் தள்ளி போவதாக மற்றொரு தகவலும் பரவியது.

பொன்னியின் செல்வன் மோஷன் போஸ்டர்

பொன்னியின் செல்வன் மோஷன் போஸ்டர்

இதற்கிடையில் சமீபத்தில், வருகிறான் சோழன் என்ற கேப்ஷனுடன் பொன்னியின் செல்வன் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. போர்க்களத்தில் சோழர்களின் கொடி பட்டொளி வீசி பறப்பதை போல் இந்த போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது. அதோடு, சாகசம் நிறைந்த வாரத்திற்கு தயாராகுங்கள் எனவும் படக்குழுவினர் குறிப்பிட்டிருந்தனர்.

டீசருக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

டீசருக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

பொன்னியின் செல்வன் முதல் பாகம், 5 மொழிகளில் ரிலீசாக உள்ளதால் மோஷன் போஸ்டரும் 5 மொழிகளில் வெளியிடப்பட்டது. இதனால் இந்த வாரம் பொன்னியின் செல்வன் டீசர் வெளியாக போகிறதா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்க துவங்கி விட்டனர். ஆனால் அது போன்ற எந்த அறிவிப்பும் மோஷன் போஸ்டரில் இடம்பெறவில்லை. அதற்கு பதில், படத்தின் ரிலீஸ் தேதி மட்டுமே இடம்பெற்றிருந்தது.

அசத்தலாக வந்த ஆதித்ய கரிகாலன்

அசத்தலாக வந்த ஆதித்ய கரிகாலன்

இந்நிலையில் சமீபத்தில், படத்தில் விக்ரம் நடிக்கும் ஆதித்ய சோழன் கேரக்டரின் மாஸான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சோழ பட்டத்து இளவரசன்...மாபெரும் போர்வீரன்...காட்டுப்புலி...ஆதித்ய கரிகாலன் என்ற கேப்ஷனுடன் போர்ப்படைகள் சூழ குதிரை மீது அமர்ந்து வரும் விக்ரமின் போஸ்டரை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வெளியிட்டுள்ளன.

வந்து விட்டான் வந்தியத் தேவன்

வந்து விட்டான் வந்தியத் தேவன்

விக்ரமின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கார்த்தி நடிக்கும் வந்தியத்தேவன் போஸ்டரை எப்போ வெளியிடுவீங்க என ஆர்வமாக கேட்டனர். ரசிகர்கள் பல நாட்களாக ஆர்வமாக கேட்டு வந்த வந்தியத் தேவன் கேரக்டரில் நடித்துள்ள கார்த்தியின் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. ராஜ்யம் இல்லா இளவரசன்..உளவாளி..கைதேர்ந்த சாகசக்காரன்...இதோ வந்துவிட்டான் வந்தியத்தேவன் என்ற கேப்ஷனுடன் கார்த்தியின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்தி கம்பீரமாக குதிரை மீது போஸ் கொடுக்கும் போஸ்டருக்கு லைக்குகள் குவிகிறது.

ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு அறிமுகமா

ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு அறிமுகமா

ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி போஸ்டர்களை தொடர்ந்து இன்று ஐஸ்வர்யா ராயின் கேரக்டரான நந்தினியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அழகிய பழிவாங்கும் முகம்...இவள் தான் நந்தினி. பழுவூரின் அரசி என்ற கேப்ஷனுடன் ஐஸ்வர்யாவின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Recommended Video

இந்த பக்கம் ஜனனி, இந்த பக்கம் ஐஸ்வர்யா | Ashok கலகல Speech | Vezham *Kollywood | Filmibeat Tamil
 ரிலீசை உறுதி செய்த டீம்

ரிலீசை உறுதி செய்த டீம்

அதோடு, பொன்னியின் செல்வன் முதல் பாகம் தியேட்டர்களில் செப்டம்பர் 30 ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் என குறிப்பிட்டு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X