சூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை வெளியிட்ட பொன்னியின் செல்வன் டீம்.. அட எல்லாத்துலயும் மணிரத்னம்தான் டாப்

சென்னை : முன்னணி நடிகர்களை கொண்டு அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

இந்தப் படம் தற்போது 20 நாட்களை கடந்து திரையில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. 500 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது.

இதனிடையே நாள்தோறும் இந்தப் படத்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள், மேக்கிங் வீடியோக்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

நடிகர்கள் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், அஸ்வின், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்களை கொண்டு உருவாக்கப்பட்டு கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது பொன்னியின் செல்வன். இந்தப் படத்தை தனது நீண்ட நாள் கனவாக கொண்டிருந்த மணிரத்னம் சிறப்பாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.

இரண்டாவது பாகம்

இரண்டாவது பாகம்

சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான பொன்னியின் செல்வன் படம் 20 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக இரண்டாவது பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிரத்னத்தின் இயக்கம்

மணிரத்னத்தின் இயக்கம்

இந்த இரு பாகங்களின் சூட்டிங்கை 150 நாட்களில் நடத்தி முடித்து சாதனை புரிந்துள்ளார் மணிரத்னம். இரண்டு பாகங்களும் மிகவும் மிரட்டலாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இத்தனை குறுகிய காலகட்டத்தில் சூட்டிங்கை மணிரத்னம் முடித்தது குறித்து இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்ட பலரும் வியப்பை தெரிவித்திருந்தனர்.

ராஜமௌலி மிரட்சி

ராஜமௌலி மிரட்சி

ராஜமௌலிக்கு பாகுபலி படத்தின் இரு பாகங்களையும் எடுத்து முடிக்க 5 ஆண்டுகள் ஆன நிலையில், 150 நாட்களில் பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்டமான இரு பாகங்கள் உருவானது குறித்து அவர் மிரட்சியை தெரிவித்துள்ளார். எப்போதுமே தன்னுடைய படங்களை சரியான திட்டமிடலுடன் இயக்கிவரும் மணிரத்னத்திற்கு இது சாத்தியமே.

ரூ 500 கோடி வசூல்

ரூ 500 கோடி வசூல்

இதனிடையே இந்தப் படம் தற்போது 500 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் ரிலீசான நிலையிலும் இந்தப் படத்திற்கான ரசிகர்களின் வரவேற்பு ஒரு பக்கம் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள், மேக்கிங் போன்றவற்றை படக்குழு தினந்தோறும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

புகைப்படங்கள் வெளியீடு

புகைப்படங்கள் வெளியீடு

இதனிடையே இன்றைய தினம் படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்களில் பிரதானமாக மணிரத்னம் காணப்படுகிறார். விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டவர்களுக்கு அவர் சூட்டிங் ஸ்பாட்டில் காட்சிகளை விளக்குவதாக இந்தப் புகைப்படங்கள் அமைந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X