அஞ்சாத பழுவேட்டையர்கள்… அதிரடியாக களமிறக்கிய பொன்னியின் செல்வன் டீம்: மிரட்டலான லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ம்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் படத்தை லைகா புரோடக்‌ஷன்ஸும் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வனில் சரத்குமார், பார்த்திபன் இருவரின் கேரக்டர்கள் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சாதனை படைக்குமா பொன்னியின் செல்வன்?

சாதனை படைக்குமா பொன்னியின் செல்வன்?

எம்.ஜி.ஆர் முதல் ரஜினி, கமல் வரை பலரும் முயற்சி செய்த பொன்னியின் செல்வன், மணிரத்னம் இயக்கத்தில் இப்போது சாத்தியமாகியுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படம் சாதனை படைக்குமா என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் ஆடியோ வெளியீடு

பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் ஆடியோ வெளியீடு

மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தில் இருந்து ரஹ்மான் இசையில் 'பொன்னி நதி', 'சோழா சோழா' ஆகிய பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் வரும் 6ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ரசிகர்கள் இதனை ரொம்பவே எதிர்பார்த்துள்ளனர்.

அச்சமில்லாத பழுவேட்டரையர்கள் அறிமுகம்

அச்சமில்லாத பழுவேட்டரையர்கள் அறிமுகம்

இதனிடையே, பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து தரமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் சரத்குமார், பார்த்திபன் இருவரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்து வந்தனர். தற்போது அவர்கள் நடிக்கும் கேரக்டர்கள் குறித்து அறிவித்துள்ளதோடு, அவர்களின் போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளது. மேலும், இதற்கான கேப்ஷனில் "சோழர் பெருமையின் அஞ்சாத பாதுகாவலர்களை சந்திக்கவும்" என்று குறிப்பிட்டு, சரத்குமார்'பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்திலும் பார்த்திபன் சின்ன பழுவேட்டரையர் கேரக்டரிலும் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழுவேட்டரையர்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு

பழுவேட்டரையர்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு

கல்கி எழுதியிருந்த பொன்னியின் செல்வன் நாவலில் பழுவேட்டரையர்களின் பாத்திரம் ரொம்பவே முக்கியமானது. வாசகர்களால் அதிகம் விரும்பப்பட்ட இந்த பாத்திரங்களில், சரத்குமாரும் பார்த்திபனும் நடித்துள்ளது எதிர்பார்ப்பை இன்னும் தூண்டியுள்ளது. இந்நிலையில், சரத்குமார், பார்த்திபன் இருவரது போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனிடையே 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'பொன்னி நதி' பாடலை ஏ.ஆர். ரஹ்மானோடு இணைந்து பாடியிருந்த பிரபல பாடகர் பம்பா பாக்யா, உடல்நலக் குறைவால் உயிரிழந்தது, படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X