பிரமோஷனல் டூரின் அடுத்தக்கட்டம்.. பொன்னியின் செல்வன் டீம் எங்க போயிருக்காங்க தெரியுமா?
திருவனந்தபுரம் : நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன்.
இந்தப் படம் இன்னும் 10 நாட்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.
இதனிடையே படத்தின் பிரமோஷனை பல்வேறு கட்டங்களில் படக்குழு மேற்கொண்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்றுக் காவியம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இரு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங்கை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.

2வது பாகம் ரிலீஸ் அப்டேட்
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் வெறுமனே 155 நாட்களில் இந்தப் படங்களின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார் மணிரத்னம். படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த 9 மாதங்களில் ரிலீசாகும் என்று மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

10 நாட்களில் ரிலீஸ்
இன்னும் 10 நாட்களில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டது.

படக்குழுவின் பிரமோஷனல் டூர்
ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தில் 6 பாடல்கள் உள்ள நிலையில் தற்போது 4 பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் போஸ்டர்களும் அடுத்தடுத்து வெளியாகி சிறப்பான பிரமோஷனை கொடுத்து வருகின்றன. இந்நிலையில் படக்குழுவினர் இணைந்து பிரமோஷனல் டூரையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளா சென்ற படக்குழு
சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு துவங்கிய இந்த பிரமோஷனல் டூரில் அடுத்தக்கட்டமாக கேரளாவிற்கு படக்குழுவினர் சென்றுள்ளனர். இதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மணிரத்னம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா உள்ளிட்டோர் இந்தப் புகைப்படங்களில் காணப்படுகின்றனர்.

ஜெயம்ரவி பதிவிட்ட புகைப்படங்கள்
இன்றைய தினம் இவர்கள் அனைவரும் இணைந்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். இதனிடையே படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம்ரவி, இவர்களது பயணத்தின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சோழர்களின் பயணம் துவங்கியுள்ளதாகவும் அவர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











