வெளிநாட்டில் 40 நாள் ஷூட்டிங் திட்டம்.. சார்டட் பிளைட் அனுமதிக்கு காத்திருக்கும் மணிரத்னம் டீம்!
சென்னை: பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கிற்காக, சார்ட்டட் பிளைட் அனுமதிக்கு மணிரத்னம் டீம் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
கொரோனா காரணமாக தடைபட்டிருக்கிறது 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஷூட்டிங். இந்த படம் இரண்டு பாகமாக எடுக்கப்படுகிறது.
இதற்கு முதல் பாகத்தை எடுத்து முடித்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் மொத்த திட்டங்களையும் சிதைத்து விட்டது.

விக்ரம், ஜெயம் ரவி
கல்கியின் புகழ்பெற்ற இந்த நாவலான 'பொன்னியின் செல்வனை' பலர் படமாக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து மணிரத்னம் இப்போது இயக்கி வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உள்பட பல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

ஐஸ்வர்யா ராய்
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இளங்கோ கிருஷ்ணன் பாடல்கள் எழுதுகிறார். இதில் ஐஸ்வர்யா ராய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நந்தினியாகவும் மந்தாகினி தேவியாகவும் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா லட்சுமி, பூங்குழலி கேரக்டரில் நடிக்கிறார்.

லாக்டவுன் காரணமாக
இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அடுத்து ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியிலும் புதுச்சேரியிலும் படமாக்கப்பட்டது. அடுத்தக்கட்ட பட்டப்பிடிப்பு புனேவில் தொடங்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில்தான் கொரோனா கபளீகரம் செய்தது.

வெளிநாடுகளில் ஷூட்டிங்
அடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் இதன் ஷூட்டிங் நடத்தப்பட இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது லொகேஷனை மாற்றியுள்ளனர். இதுபற்றி படக்குழு கூறும்போது, 'சில இந்தி படங்களின் ஷூட்டிங்கை வெளிநாடுகளில் நடத்தி வருகின்றனர். இதற்காக, சார்டட் பிளைட்டில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

சார்டட் பிளைட்
அதே போல, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை இலங்கையில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. மொத்தம் 40 நாட்கள் அங்கு நடத்த திட்டம். இதற்காக சார்டட் பிளைட்டுக்கு அனுமதி கேட்டு விமானத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அது கிடைத்ததும் நடிகர், நடிகைகளிடம் கால்ஷீட் கேட்கப்படும். பிறகு அங்கு செல்வார்கள்' என்று தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications