twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Ponniyin Selvan Teaser Launch : “என் 40 ஆண்டுகால கனவு“..நெகிழ்ந்த மணிரத்னம்!

    |

    சென்னை : பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    Recommended Video

    வெளியானது Ponniyin Selvan Part 1 Teaser... கொண்டாடத்தில் ரசிகர்கள்

    விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திலும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷா ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

    இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசி மணிரத்னம், பொன்னியின் செல்வன் என் 40 ஆண்டுகால கனவு என்றார்.

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார். பாகுபலி காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு டீசர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இணையத்தில் வெளியான டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    என் 40 ஆண்டு கனவு

    என் 40 ஆண்டு கனவு

    இந்த டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய மணிரத்னம், என்னுடைய முதல் நன்றி கல்கிக்கு என்று பேசத்தொடங்கினார். நான் கல்லூரியில் படிக்கும் போது இந்த புத்தகத்தை படித்தேன் அன்றில் இருந்து இந்த கதை மனதைவிட்டு விலகவில்லை. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படத்தை மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் செய்திருக்க வேண்டிய படம் நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு பிறகு இதை எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் படம் எடுக்க முடியாமல் போனது. எனக்காகத்தான் விட்டுட்டு சென்றிருக்கிறார் என்று இப்போது நினைக்கிறேன்.

    இது உங்களால் சாத்தியமானது

    இது உங்களால் சாத்தியமானது

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்க பலர் பேர் முயற்சி செய்துள்ளார்கள். நானே இந்த படத்தை எடுக்க பலமுறை முயற்சி செய்தேன் ஆனால் இப்போது தான் என்னால் எடுக்க முடிந்தது. இதனால், இந்த படத்தின் மீது எனக்கு நிறைய பொறுப்பு இருந்தது. இந்த கதையை படிச்சி இன்ஸ்பயர் ஆனவர்களில் நானும் ஒருவர். இது மணிரத்னம் என்ற தனி நபரால் சாத்தியமாகி இருக்க முடியாது. நடிகர்கள், ரவிவர்மன், ஏர்.ஆர்.ரஹ்மான், தோட்டா தரணி, ஸ்ரீதர் பிரசாத் போன்றவர்களால் என் கனவு இன்று நிறைவேறியுள்ளது.

    அனைவருக்கும் நன்றி

    அனைவருக்கும் நன்றி

    கொரோனா காலத்தில் தான் இந்த படத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால், அனைவரும் மிகவும் சிரமம் அடைந்தார்கள். இந்த சிரமத்திற்கு இடையிலும் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி, குறிப்பாக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி என்று இயக்குநர் மணிரத்னம் அந்த விழாவில் பேசினார்.

    English summary
    Ponniyin Selvan Teaser Launch function Manirathnam speech
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X