“பொன்னியின் செல்வன்“ பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா.. எப்போ தெரியுமா ?
சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது.
இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பொன்னியின் செல்வன்
மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தில் சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பாடல் எழுதிய மணிரத்னம்
இந்த படத்தின் இசைக்கோர்ப்புப் பணிகளை இப்போது ரஹ்மான் மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஒரு பாடலை இயக்குனர் மணிரத்னமே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக மணிரத்னம் படங்களுக்கு வைரமுத்து பாடல்களை எழுதுவார். ஆனால் முதல் முறையாக பொன்னியின் செல்வன் படத்துக்காக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், வெண்பல கீதையன், கபிலன் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.

குவாலியரில்
மிகவும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிசேரி ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடைபெற்றது. இறுதிகட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தின் கோட்டை நகரம் என அழைக்கப்படும் குவாலியரில் நடைபெற்றது. குவாலியர் கோட்டை 9 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். குவாலியர் நகரம் அரண்மனைகள் கோவில்களுக்கு பெயர் பெற்றதாகும்.

பிரம்மாண்ட விழா
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை ஜூன் மாதம் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்கான ப்ரோமோஷனையும், இப்படத்தில் இடம் பெற்றுள்ள முன்னணி நடிகர்களை வைத்து தொடங்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











