பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா.. தஞ்சையில் நடைபெற முக்கிய காரணம் ?
சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த மிக முக்கியமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதில், லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பொன்னியின் செல்வன்
கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கிய முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடித்து கிராபிக்ஸ், பின்னணி இசைகோர்ப்பு உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகளை நடைபெற்று வருகின்றன.

ஏ.ஆர்.ரகுமான் இசை
படத்துக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரகுமான் சில காட்சிகள் திருப்தியாக இல்லை என்று கூறியதாகவும் இதையடுத்து அந்த காட்சிகளை நீக்கி விட்டு மீண்டும் படப்பிடிப்பை நடத்த மணிரத்னம் திட்டமிட்டு இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது. ஆனால், இணையதங்களில் பரவி உள்ள தகவல் உண்மை இல்லை என்றும் மீண்டும் படப்பிடிப்பை நடத்தும் திட்டம் இல்லை என்றும் எடுத்த காட்சிகள் அனைவருக்கும் திருப்தி அளிப்பதாக உள்ளது என்றும் படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

வெறித்தனமான டீசர்ல
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை ஜூலை மாதம் வெளியிட வெறித்தனமாக படக்குழு தயார் செய்து வருவதாகவும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் டீசர் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட படம் என்பதால் டீசர் வெளியீட்டையே பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கும் தஞ்சை மண்ணுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், படத்தின் டீசரை அங்கிருந்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

முதல் பாகம் ரிலீஸ்
பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி முதல் திரைக்கு வெளியாக உள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











