twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மணிரத்தினம் கைவண்ணத்தில்.. பொன்னியின் செல்வன்.. கற்பனை கலந்த வரலாற்று புதினம்

    |

    Recommended Video

    Surya 40 update | Surya joins Vetrimaran | Ponniyin Selvan

    சென்னை : ஒரு வரலாற்று கதையை பலரும் திரைப்படமாக எடுக்க ஆர்வம் காட்டி கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கழித்து தற்போது அது திரைப்படமாக உருவெடுத்துள்ளது அது தான் கல்கியின் பொன்னியின் செல்வன்.

    கல்கி எழுதிய புகழ் பெற்ற புனிதம் பொன்னியின் செல்வன் ஆகும். 1950 முதல் 1955 வரை கல்கி வார இதழில் தொடர் கதையாக வெளிவந்தது. மேலும் புத்தக வடிவில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் இதனை வாங்கி படித்தனர்.

    கதையின் ஆரம்பமே புதுவெள்ளம் ஆடி பதினெட்டு வெள்ளம் என கற்பனை ஓடத்தில் நாமும் ஏறி பணிக்கு அனுபவத்தை தரும். இந்த பொன்னியின் செல்வன் கதைக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    என்னம்மா இப்போலாம் செக்ஸியா போட்டோ போடுறது இல்லை.. வான்டட்டா வந்து வம்பிழுக்கும் நெட்டிசன்ஸ்!என்னம்மா இப்போலாம் செக்ஸியா போட்டோ போடுறது இல்லை.. வான்டட்டா வந்து வம்பிழுக்கும் நெட்டிசன்ஸ்!

     திரைப்படம்

    திரைப்படம்

    இப்படத்தை எடுக்க மக்களின் தலைவர் எம்.ஜி.ஆர் அவரை தொடர்ந்து கலைஞர் கருணாநிதி அவரையும் தொடர்ந்து இயக்குநர் நாகா மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் போன்றவர்கள் ஆசைப்பட்டனர். இவர்களை தவிர்த்து இயக்குநர் மணிரத்னம் இதனை எடுத்தே ஆக வேண்டும் என்று இதனை தனது கனவு திரைப்படமாக இயக்க வேண்டும் என்று காத்து கிடந்தார்.

     பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் இளைய மகள் சவுந்தரியா ரஜினிகாந்த் பொன்னியின் செல்வனை வேப் சீரிஸ் ஆக எடுப்பதாக அதன் புகைபடங்கள் உடன் அதிகாரபூர்வமாக அறிவிதிருந்தார். இந்த கதையை எடுக்க ஏன் இவ்வளவு போட்டி என்று பல திரை ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். ஏன் இவ்வளவு போட்டி என்று பொன்னியின் செல்வன் கதையை படித்து ரசிகர்களுக்கு மட்டுமே அறிவர்.

     மணிரத்தினம் கையில்

    மணிரத்தினம் கையில்

    என்ன தான் எல்லோரும் எடுப்பதாக ஆசைப்பட்டாலும் அதற்கான நேரம் அமையவில்லை. பலரும் எடுப்பதாக கூறிய படத்தை தற்போது இயக்குனர் மணிரத்னம் திரை வடிவில் மெருகேற்றி வருகிறார். அதன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பல கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். அதில் மிகவும் முக்கியமானவர் தோட்டா தரணி.

     விருது பெற்றவர்கள்

    விருது பெற்றவர்கள்

    தனது கலை சேவையால் பலரை கவர்ந்த தோட்டா தரணி இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.சிறந்த கலை இயக்குநர்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். மற்றும் இவருக்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்து. இப்படத்திற்கு இவருக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை.

     கவனிக்க வேண்டியது

    கவனிக்க வேண்டியது

    படத்தின் டைட்டில் லுக்லில் ஒரு வாள் இடம் பெற்று உள்ளது. சூப்பராக இருக்கிறது இந்த வாள். இதனை பலரும் அருள்மொழி வர்மனின் வாள் தான் என்றும் படத்தில் அந்த கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிரத்தினம் இதை எப்படி எடுக்கப் போகிறார் என்பது அதில் முக்கியமானது.

    English summary
    Ponniyin selvan the greatest novel
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X