twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்ஜிஆரும், ரஜினிகாந்தும் பொன்னியின் செல்வனும்..நாவலின் கேரக்டர் பெயர்களை அடுக்கி அசத்திய ரஜினி

    |

    சென்னை: இன்று பொன்னியின் செல்வன் டீசர் வெளியாகியது. இந்தக்கதைக்கும் எம்ஜிஆருக்கும், ரஜினிகாந்துக்கும் பெரும் தொடர்பே உள்ளது. அதுகுறித்த சுவாரஸ்ய விஷயங்களை பார்ப்போம்.

    Recommended Video

    வெளியானது Ponniyin Selvan Part 1 Teaser... கொண்டாடத்தில் ரசிகர்கள்

    சோழமன்னன் வரலாற்றை பொன்னியின் செல்வன் நாவலாக கல்கி எழுதியதை தமிழில் படமாக எடுக்க பலர் முயன்றும் முடியாமல் போக இறுதியில் மணிரத்னம் சாதித்துள்ளார்.

    எம்ஜிஆர் ஆசைப்பட்டார், ரஜினி விரும்பிய நாவல் தற்போது பொன்னியின் செல்வனாக வெளிவந்துள்ளது.

     வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்.. பிரபலங்கள் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா? வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்.. பிரபலங்கள் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

     டீசர் விழாவில் மணிரத்னம் பேசிய பேச்சு

    டீசர் விழாவில் மணிரத்னம் பேசிய பேச்சு

    பொன்னியின் செல்வன் பெரிய காவியம், எம்ஜிஆர் அதை படமாக எடுக்க முயற்சி செய்தார், ஆனால் முடியவில்லை. எனக்காகத்தான் விட்டுட்டு போய்விட்டார் என்று நினைக்கிறேன். அதன் பிறகு பலபேர் முயற்சி செய்தார்கள், நானே 3 முறை முயற்சி செய்து முடியவில்லை. 1980 களில், 90 களில் முயற்சி செய்தேன் இன்று முடிந்துள்ளது, இது இயக்குநர் மணி ரத்னம் டீசர் விழாவில் பேசியது. பொன்னியின் செல்வன் கதை திரைக்கதையாக மாறுவதில் உள்ள பிரச்சினையை மணிரத்னம் சில வார்த்தைகளுடன் கடந்துவிட்டார். ஆனால் பல ஆண்டுகள் எம்ஜிஆர் போன்றோர் முயன்றது இன்று முடிந்துள்ளது.

     எம்ஜிஆர் எடுத்த முயற்சி, நிறைவேறாமல் போனது

    எம்ஜிஆர் எடுத்த முயற்சி, நிறைவேறாமல் போனது

    எம்ஜிஆர் 1950 களின் இறுதியில் முயற்சி எடுத்தார். இன்று கார்த்தி, ஜெயம் ரவி நடிக்கும் இரண்டு ரோல்களையும் எம்ஜிஆரே நடிக்கும் படி முடிவானது. ஆனால் கால தாமதம், எம்ஜிஆருக்கு ஏற்பட்ட விபத்து தொடர் அரசியல் நிகழ்வுகள், மிகப்பெரும் ஜாம்பவான் எம்ஜிஆராலேயே முடியாமல் போனது. அதன் பின்னர் பாரதிராஜாவிடம் செய்யும்படி எம்ஜிஆர் கேட்டுக்கொண்டதாக சொல்வார்கள், அதுவும் நடக்காமல் போனது. 80 களில் மணிரத்னம் முயன்றார். தயாரிப்புச் செலவு வசதி குறைவால் முடியாமல் போனது.

     தாய்மொழி கன்னடம் என்றாலும் ரஜினியை கவர்ந்த பொன்னியின் செல்வன்

    தாய்மொழி கன்னடம் என்றாலும் ரஜினியை கவர்ந்த பொன்னியின் செல்வன்

    இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் புதினம் மீது மிகுந்த ஆர்வம் உள்ளவர். ரஜினிகாந்த் தமிழகத்துக்கு வந்த பின்னர்தான், அதாவது 1970 களின் பிற்பாதியில் தான் தமிழ் கற்றார். ஆனால் தமிழை அறிவது வேறு, தமிழை படிப்பது வேறு, தமிழில் அந்தக்காலத்தில் கல்கியால் எழுதப்பட்ட நுணுக்கமான கடின வார்த்தைகள் கொண்ட தமிழை படிப்பது வேறு. இவை அனைத்தையும் கடந்து பொன்னியின் செல்வனை ரஜினிகாந்த் படித்துள்ளார். அதன்மீது மிகுந்த ஆர்வத்தை ரஜினிகாந்த் வைத்திருந்தார்.

    ரஜினிக்கு பிடித்த பொன்னியின் செல்வன்

    ரஜினிக்கு பிடித்த பொன்னியின் செல்வன்

    ஒருமுறை ஒருவிழாவில் ரஜினிகாந்தை பாலச்சந்தர் நேரடியாக விழா மேடையில் பேட்டி எடுத்தார் அப்போது ரஜினியிடம் பல கேள்விகளை பாலச்சந்தர் கேட்டார். அப்போது உனக்கு பிடித்த நூல் எது என அவர் கேட்க ரஜினி சற்றும் தயங்காமல் பொன்னியின் செல்வன் என்றார். பாலச்சந்தர் என்ன என திருப்பிக்கேட்க பொன்னியின் செல்வன் என மறுபடியும் சொன்னார். ஓ சிறப்பு என்று பாராட்டினார். தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     ரஜினியின் அபார அறிவாற்றல்

    ரஜினியின் அபார அறிவாற்றல்

    இதேபோல் ஒரு விழாவில் பேசிய ரஜினிகாந்த் "பொன்னியின் செல்வன் சுமார் 60 ஆண்டுகளாக எம்ஜிஆரிலிருந்து அந்த படத்தை எடுக்கணும் என்று பலரும் முயற்சி செய்து முடியாமல் போய் அந்த கனவை இப்போது லைகா நனவாக்கி வைத்துள்ளார்கள். மணிரத்னம் அதை இயக்கப்போகிறார். அவரது இயக்கத்தில் ஆதித்ய கரிகாலன், வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன், குந்தவை, நந்தினி, பூங்குழலி ஆழ்வார்க்கடியான், மந்திரவாதி போன்ற கேரக்டர்கள் எப்படி வரப்போகுதுன்னு ஆவலா காத்துகிட்டிருக்கிறோம்" என்று பேசினார்.

    எம்ஜிஆர், ரஜினியை கவர்ந்த பாத்திரங்கள் வெள்ளித்திரையில் தோன்ற உள்ளன

    எம்ஜிஆர், ரஜினியை கவர்ந்த பாத்திரங்கள் வெள்ளித்திரையில் தோன்ற உள்ளன

    இத்தனைக்கும் ரஜினியின் கையில் ஒரு துண்டுச் சீட்டுக்கூட இல்லை. அவர் அந்த நாவலை படித்து அதனால் ஈர்க்கப்பட்டால் தான் அவ்வாறு பேச முடியும். ரஜினிகாந்தையே கவர்ந்த அந்த நாவல் திரைப்படமாக வர உள்ளது. ரஜினிக்கும், எம்ஜிஆருக்கும் விருப்பமான படத்தை அந்த கேரக்டர்களை ஸ்க்ரீனில் ரசிகர்கள் காண ஆவலாய் உள்ளனர். செப்.30 ஆம் தேதி படம் வெளியாகிறது. மணிரத்தினத்தால் இப்படம் எடுக்க சாத்தியம் எப்படி உருவானது? என்கிற கேள்வி எழலாம்.

     மணிரத்னம் படம் எடுக்க சாத்தியமானதற்கு இதுதான் காரணம்

    மணிரத்னம் படம் எடுக்க சாத்தியமானதற்கு இதுதான் காரணம்

    தற்போதை சினிமா காலக்கட்டம் வேறு வகையான கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. டெக்னாலஜி, விரிவடைந்த நிலையில் உள்ள சந்தை, படம் எடுக்க முதலீடு செய்ய தயாராக உள்ள பெரும் நிறுவனங்கள், சினிமாவின் உலகளாவிய நுணுக்கம் அறிந்தவர்கள் காரணமாக இப்போது படம் எடுப்பதற்கு எளிதாக மாறியுள்ளது. இதனால் பொன்னியின் செல்வன் சாத்தியமானது. இந்தப்படம் வெற்றிபெறுமானால் இதைப் பின்பற்றி பல படங்கள் வர வாய்ப்புள்ளது.

    English summary
    Ponniyin Selvan Teaser released today...There is a connection of this story with Rajinikanth and MG Ramachadran..Lets see the interesting facts about this in this story..
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X