மாஸ் அப்டேட்.. பொன்னியின் செல்வன் டீம் நாளைக்கு புத்தாண்டு ட்ரீட் தர காத்திருக்கிறது!
சென்னை: பொன்னியின் செல்வன் படம் குறித்த பல அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகமல் அரசல் புரசலாக கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மெட்ராஸ் டாக்கீஸ் நாளை பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் லுக் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சரித்திர கதையாக உருவாகி வரும் பொன்னியின் செல்வனின் டைட்டில் ஃபான்ட் லுக் எப்படி இருக்கப்போகிறது என்ற ஆவலில் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

மாஸ்டர் அலை
விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்த பேச்சுக்களே இணையத்தை ஆக்கிரமித்து இருக்கின்றன. மாஸ்டர் அலை இருக்கும் சமயத்தில் பிரம்மாண்ட பட்ஜெட் படமான பொன்னியின் செல்வன் டைட்டில் லுக்கை வெளியிட மெட்ராஸ் டாக்கீஸ் விரும்பவில்லை என்றே தெரிகிறது.
நாளைக்கு ட்ரீட்
2020 புத்தாண்டு இன்று பிறந்துள்ள நிலையில், பொன்னியின் செல்வன் டைட்டில் ஃபான்ட் லுக்கை நாளை படக்குழு வெளியிடுகிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் டைட்டில் லுக் நாளை சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காத்திருக்கிறோம்
பொன்னியின் செல்வன் டைட்டில் லுக்குக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் என ஃபேன் மேட் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
விக்ரம் தான் மாஸ்
சியான் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து வரவுள்ள பிரம்மாண்ட படங்களான கோப்ரா, துருவநட்சத்திரம், பொன்னியின் செல்வன், கர்ணா படங்களின் போஸ்டர்களை போட்டு விக்ரம் தான் மாஸ் என்பதை இந்த ரசிகர் சொல்லாமல் சொல்கிறார்.
நம்பிக்கை இல்லை
பொன்னியின் செல்வன் மாதிரியான பிரம்மாண்ட கதையை ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தரமாக மணிரத்னம் கொடுப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.
சூப்பர்
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஏ.ஆர். ரஹ்மான், லைகா, மணிரத்னம் எனும் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் டைட்டில் லுக் நாளைக்கு சூப்பராக வரும் என இந்த ரசிகர் ஆவலோடு காத்திருக்கிறார்.
பொங்கலுக்கு ஒரு அப்டேட்
டைட்டில் லுக் மட்டும் போதாது பொங்கலுக்கு கெத்தா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்று பெரிய அப்டேட்டாக விடுங்கள் என இவரை போல் பல ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











