வைரமுத்து அவுட்? பொன்னியின் செல்வன் டைட்டில் லுக்கை வெளியிட்ட மெட்ராஸ் டாக்கீஸ்!
Recommended Video
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ் ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் பொன்னியின் செல்வன் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது.

தமிழ் படம் தானே தமிழில் டைட்டில் வெளியிடலாமே என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
லைகா நிறுவனமும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
ரவி வர்மன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஜெயமோகன் வசனங்கள் எழுதியுள்ளார்.
மூலக் கதைக்காக கிரெடிட்ஸ் அமரர் கல்கிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. திரைக்கதை மற்றும் இயக்கத்தை இயக்குநர் மணிரத்னம் செய்து வருகிறார்.
தற்போது வெளியாகியுள்ள டைட்டில் லுக்கில் படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், வைரமுத்துவின் பெயர் இடம் பெறவில்லை. மீ டூ புகார் காரணமாக அவர் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஆனால், பாடலாசிரியர் யார் என்ற தகவலை மணிரத்னம் இதில் குறிப்பிடவில்லை.
அதே போல நடிகர்கள் பெயரும் இந்த டைட்டில் லுக்கில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
பொங்கலுக்கு பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் லுக் வரும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரையிலும் அடுத்த அடுத்த பாகங்கள் வெப் சீரிஸாகவும் வெளியாகும் என்ற தகவலும் அண்மையில் கசிந்தது. ஆனால், அது குறித்த விளக்கமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், லால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











