மரண மாஸ்தான் போங்க..ஒரே நேரத்தில் 5 மொழிகளில்..5 ஸ்டார்ஸ் வெளியிடும் பொன்னியின் செல்வன் டிரைலர்!
சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த டிரைலரை 5 மொழிகளிலும் 5 நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளனர். இந்த விழாவிற்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில், சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

அடுத்தடுத்து அப்டேட்
ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடைபெற்று முடிந்து படத்தின் முதல் பாகம் 30ந் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், படம் குறித்த அடுத்தடுத்து தகவல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

யார் யார் என்ன ரோல்
ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பதை படக்குழு போஸ்டரை வெளியிட்டது. இதில், ஆதித்த கரிகாலன, வந்தியத் தேவன்,அருண்மொழி வர்மன், குந்தவை, நந்தினி, பூங்குழனி ஆகியோரின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது. இதில் ஆதித்த கரிகாலன் நெற்றியில் இருப்பது திலகமா? நாமமா? என்ற சர்ச்சை எழுந்தது. அதே போல அருண் மொழி வர்மன் பெயர் குறித்தும், த்ரிஷாவின் உடை சர்ச்சை எழுந்தது.
கோலாகல கொண்டாட்டம்
தற்போது பொன்னியின் செல்வன் முதல்பாகத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று மாலை 6 மணிக்கு மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர்.

5மொழிகளில்..5 ஸ்டார்
மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், 5மொழிகளில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலரை, தமிழில் கமல்ஹாசன், இந்தியில் அனில் கபூர், மலையாளத்தில் பிருத்திவிராஜ், தெலுங்கில் ரானா டகுபதி மற்றும் கன்னடத்தில் ஜெய்ந்த் கைகினி ஆகியோ ஒரே நேரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொன்னியின் செல்வன் பிரியர்கள் ஏகத்திற்கும் குஷியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











