லாஸ் வேகாஸில் பறக்கும் சோழர்கள் கொடி.. பொன்னியின் செல்வனுக்கு இதை விட பெரிய புரமோஷன் பண்ண முடியாது!

சென்னை: பொன்னியின் செல்வன் படத்துக்கு லைகா நிறுவனம் புரமோஷனே ஆரம்பிக்கல என சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வந்தனர்.

ஆனால், தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் பொன்னியின் செல்வன் டிரைலர் ஓடும் அளவுக்கு வேறலெவல் புரமோஷனை படக்குழு தெறிக்கவிட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து பொன்னியின் செல்வன் படத்தின் கதை பற்றியும் அதன் பிரம்மாண்டம் குறித்தும் பேசி வருகின்றனர்.

மும்பையில் புரமோஷன்

மும்பையில் புரமோஷன்

சென்னை, ஹைதராபாத், மும்பை என இந்தியாவின் முக்கிய நகரங்களில் பொன்னியின் செல்வன் டீமுடன் இயக்குநர் மணிரத்னம் பிரம்மாண்ட புரமோஷனை நடத்தி வருகிறார். ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா, ஏ.ஆர். ரஹ்மான், சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

அனல் பறக்கும் புக்கிங்

அனல் பறக்கும் புக்கிங்

அமெரிக்காவில் 4.40 லட்சம் டாலர்களுக்கு இதுவரை பொன்னியின் செல்வன் ப்ரீ புக்கிங் நடைபெற்றுள்ளதாகவும் படம் வெளியாவதற்கு முன்னதாக 1 மில்லியன் டாலருக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ள்னா. தமிழர்களின் வரலாற்றை பார்க்க உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் காத்து நிற்கின்றனர்.

வேகாஸில் வந்தியத்தேவன்

வேகாஸில் வந்தியத்தேவன்

லாஸ் வேகாஸில் வந்தியத்தேவன் என நடிகர் கார்த்தியின் பொன்னியின் செல்வன் போஸ்டரை ட்விட்டரில் தமிழ் டாக்கீஸ் போட்டு மாஸ் காட்டி உள்ளது. நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் அந்த ஸ்டில்லை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் டிரைலரே

பொன்னியின் செல்வன் டிரைலரே

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள டிஜிட்டல் பில் போர்டுகளில் பொன்னியின் செல்வன் டிரைலர் ஒளிபரப்பாகி வருகிறது. வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தை காண உலக ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டி உள்ள நிலையில், ஹைப் உச்சத்தை அடைந்துள்ளது.

தனுஷ் மட்டும் போட்டி

தனுஷ் மட்டும் போட்டி

பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக நடிகர் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகிறது. நாளை முதல் படத்திற்கானபுக்கிங் ஓப்பன் ஆகிறது என தற்போது நடிகர் தனுஷ் ட்வீட் போட்டுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்துக்கு எந்தவொரு புரமோஷனும் இல்லையா பாஸ்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருச்சிற்றம்பலம் படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X