Ponniyin Selvan Trailer: போர், வஞ்சகம், சூழ்ச்சி, அரியணை.. கமல் குரலில் மிரட்டும் டிரைலர்!

சென்னை: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் இணைந்து பொன்னியின் செல்வன் பாகம் 1ன் டிரைலரை வெளியிட்டனர்.

இயக்குநர் ஷங்கர், சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் மேடையில் பாடப்பட்டன. யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து டிரம்ஸ் சிவமணியுடன் டிரம்ஸ் வாசித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

பொன்னியின் செல்வன் டிரைலர்

பொன்னியின் செல்வன் டிரைலர்

இரவு 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் டிரைலர் 11 மணிக்கு மேல் வெளியானது. நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்காக பிரத்யேகமாக நாயகன் மற்றும் தளபதி படங்களின் ஏவி ஒளிபரப்பான பிறகு பொன்னியின் செல்வன் டிரைலரை இருவரும் மேடையேறி வெளியிட்டனர்.

கமல் குரலில்

கமல் குரலில்

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு என கமல் வாய்ஸ் ஓவரில் தான் ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் டிரைலரும் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு மொழியில் ஒவ்வொரு பிரபலங்கள் என 5 பிரபலங்கள் பொன்னியின் செல்வன் டிரைலருக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளனர். இந்தியில் அனில் கபூர், தெலுங்கில் ராணா டகுபதி என பிரபலங்களின் அறிவிப்பையும் லைகா முன்னரே அறிவித்து இருந்தது.

போர் காட்சிகள்

போர் காட்சிகள்

பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக ஏகப்பட்ட போர் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகளை வைத்து இயக்குநர் மணிரத்னம் மிகவும் விறுவிறுப்பாக இயக்கி உள்ளார். கார்த்தி, ஜெயம் ரவி இணைந்து கப்பலில் போர் செய்யும் காட்சிகள் யானை மீது ஏறி பூங்குழலி உடன் ஜெயம் ரவி வரும் காட்சிகள் என அனைத்தும் பிரம்மாண்டத்தின் உச்சமாக உள்ளது.

அரியணை ஆசை

அரியணை ஆசை

வஞ்சகம், சூழ்ச்சி என ஒட்டுமொத்த வடிவாக உள்ள ஐஸ்வர்யா ராய் கடைசியாக அரியணையை பார்க்கும் காட்சி கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கு இணையாக உள்ளது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடருக்கும் பொன்னியின் செல்வன் கதைக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் உள்ளன. வீரபாண்டியனின் மகனை எப்படியாவது சோழர் குலத்தை அழித்து அரியாசனம் ஏற்ற வேண்டும் என்பது தான் நந்தினியின் லட்சியமாக பொன்னியின் செல்வன் கதையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு ராட்சஸர்கள்

நடிப்பு ராட்சஸர்கள்

சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் என ஒவ்வொரு நடிகர்களும் நடிப்பால் தங்களது போர்ஷனை தெறிக்கவிட்டுள்ளனர். வசன உச்சரிப்புகள், மற்றும் காஸ்ட்யூம்கள் எல்லாம் அந்த காலத்துக்கு ஏற்றார் போல இருப்பது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

சிஜி சொதப்பல்

சிஜி சொதப்பல்

பொன்னியின் செல்வன் டீசரில் இருந்த அதே சிஜி மற்றும் டிஐ பிரச்சனை பொன்னியின் செல்வன் டிரைலரிலும் காணப்படுவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இன்னமும் பவராக டிரைலர் கட்ஸ் இருந்திருக்கலாம் என்றும் எதிர்பார்ப்புகளை பெரிதளவில் இந்த டிரைலர் பூர்த்தி செய்யவில்லை என நெட்டிசன்கள் கமெண்ட் போட ஆர்மபித்து விட்டனர்.

நானே வருவேன் உடன் போட்டி

நானே வருவேன் உடன் போட்டி

வரும் செப்டம்பர் 29ம் தேதி தனுஷின் நானே வருவேன் படம் வெளியாகிறது. பொன்னியின் செல்வன் படம் எந்தவொரு போட்டியும் இல்லாமல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் போட்டியாக வெளியாகிறது. இந்த போட்டி எந்த படத்துக்கு சிக்கலாக மாறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X