For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வசூலில் கொழிக்கும் பொன்னியின் செல்வன்..படத்தை வைத்து மோதும் பிரபலங்கள், அனல் பறக்கும் நெட்டிசன்கள்

  |

  பொன்னியின் செல்வன் வெளியானதிலிருந்து சர்ச்சை கிளம்பியுள்ளது. சோழமன்னன் குறித்தும், படங்களை கம்பேர் செய்தும் சர்ச்சை சூடு பிடித்துள்ளது.

  பொன்னியின் செல்வன் படத்தையும், பாகுபலி படத்தையும் ஒப்பிட்டு தமிழ் தெலுங்கு ரசிகர்கள் ஒருபக்கம் மோதி வருகிறார்கள்.

  பொன்னியின் செல்வனில் சோழ மன்னனை இந்து அரசனாக மாற்றியுள்ளனர் என இயக்குநர் வெற்றிமாறன் சொல்ல திரையுலகினருக்குள் மோதல் கிளம்பியுள்ளது.

  பொன்னியின் செல்வன் -பாகுபலி மோதல்.. நாகார்ஜுனா என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க! பொன்னியின் செல்வன் -பாகுபலி மோதல்.. நாகார்ஜுனா என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க!

  பொன்னியின் செல்வன் என்றாலே பரபரப்பு தானா

  பொன்னியின் செல்வன் என்றாலே பரபரப்பு தானா

  பொன்னியின் செல்வனுக்கும் சர்ச்சைகளுக்கும், பரபரப்புக்கும் பஞ்சமே இல்லைபோலும். நாவல் வெளியான பின்னர் அன்றைய உச்ச நட்சத்திரம் எம்ஜிஆர் அதன் கதை உரிமையை வாங்கி நடிகர் முதற்கொண்டு முடிவு செய்து போஸ்டரும் அடித்து எடுக்க முயலும் நேரத்தில் நாடக மேடையில் எம்ஜிஆர் கால் முறிந்து 6 மாதம் வரை ஓய்வெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதன் பின்னர் எம்ஜிஆர் முயற்சி எடுத்தது கைகூடவில்லை.

  மூன்று முறை முயற்சி செய்த மணி ரத்னம்

  மூன்று முறை முயற்சி செய்த மணி ரத்னம்

  விக்ரம் பட வெற்றிக்குப்பின் கமல்ஹாசன் பொன்னியின் செல்வனை எடுக்க பட்ஜெட் வரை ரெடிபண்ணி இயக்குநர் மணிரத்னம், இசை இளையராஜா என்பதெல்லாம் முடிவு செய்தும் படம் எடுக்கப்பட வில்லை. இப்படத்தின் இயக்குநராக முடிவெடுக்கப்பட்ட மணிரத்னம் அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டும் ஒரு ஆடிஷன் நடத்தி நடிகர்களை முடிவு செய்தும் நடக்காமல் போனது 2019 ஆம் ஆண்டுக்கு பின் கொரோனா பேரிடர் நேரத்தில் கடுமையாக முயற்சி செய்து தற்போது படம் வந்துள்ளது.

  படம் டீசரிலேயே ஆரம்பித்தது சர்ச்சை

  படம் டீசரிலேயே ஆரம்பித்தது சர்ச்சை

  படம் வரும்போதே சிவ பக்தரான சோழமன்னன் நெற்றியில் இட்ட நாமகரணம் சம்பந்தமாக பிரச்சினை எழுந்தது. படத்தில் பயன்படுத்தும் தமிழ் சொற்கள் ஆங்காங்கே நவீன வார்த்தைகளை பயன்படுத்தியது குறித்து சர்ச்சை எழுந்தது. சோழமன்னன் தாடி வைத்திருந்தாரா எதற்கு அனைத்து கதாப்பாத்திரங்களும் தாடி வைத்துள்ளனர் என்கிற கேள்வியும் எழுந்தது. வந்திய தேவன் வீரன் சோழர் படை தலைவர் அவரை லவ்வர் பாயாக சித்தரித்துள்ளனர் என்று வழக்கறிஞர் ஒருவர் காவல் ஆணையரிடம் புகாரும் கொடுத்துள்ளார்.

  வெற்றிமாறனுக்கு ஆதரவு எதிர்ப்பாக சீமான், பேரரசு

  வெற்றிமாறனுக்கு ஆதரவு எதிர்ப்பாக சீமான், பேரரசு

  மறுபுறம் சோழ மன்னனை இந்து மன்னராக சித்தரிக்கிறார்கள் என்று வெற்றிமாறன் சொல்ல அரைகுறை என் எச்.ராஜா பதிலளிக்க, வெற்றிமாறன் சொன்னது சரிதான், சைவம், வைணவம் என இருந்த அந்த காலத்தில் சைவ மன்னனாக இருந்த சோழனை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்கள் வசப்படுத்த பார்க்கின்றனர், சோழன் எங்க ஆளு என்று சீமான் வரிந்துக்கட்ட, எங்களுக்கு சைவமும், வைணவமும் ஒன்றுதான் நாங்கள் ஒன்றுபட்ட இந்துவாக இருக்கிறோம். போலி நாத்திகம் பேசுபவர்கள் இந்து மதத்திடம் மட்டுமே பேசுகிறார்கள், போலி சாமியார்களைவிட போலி நாத்திகவாதிகள் ஆபத்தானவர்கள் என இயக்குநர் பேரரசு பேச விவகாரம் சூடு பிடித்துள்ளது.

  நெட்டிசன்கள் மோதலால் தகிக்கும் சமூக வலைதளம்

  நெட்டிசன்கள் மோதலால் தகிக்கும் சமூக வலைதளம்

  வெற்றிமாறனுக்கு ஆதரவு எதிர்ப்பு என திரையுலகினர் மோதிக்கொள்ளும் போதே நெட்டிசன்களும் மோதிக்கொள்கின்றனர். பொன்னியின் செல்வன் படத்தை பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு தெலுங்கு தமிழ் ரசிகர்கள் மோதிக்கொள்கின்றனர். இது இணைய தளம் முழுவதும் எதிரொலிக்கிறது. ட்ரோல்களும், மீம்ஸ்களும் போட்டு தங்களுக்கு ஆதரவாக எதிர்ப்பாக கோலிவுட்டும், டோலிவுட்டும் மோதிக்கொள்வதை திரையுலகினர் இது எங்கே போய் முடியப்போகிறதோ என கவலையுடன் பார்க்கின்றனர்.

  English summary
  Since the release of Ponni's Selvan, there has been controversy. Controversy has heated up regarding Cholamannan and comparing the pictures. Tamil Telugu fans are clashing comparing with Ponni's Selvan and Baahubali. A conflict has arisen among the film fraternity as director Vetrimaran says that the Chola king has been turned into a Hindu king in Ponniyin Selvan.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X