பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நிறைவு.. முதல் பாக ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

சியான் விக்ரம், கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கல்கியின் நாவல்

கல்கியின் நாவல்

அமரர் கல்கி மன்னன் ராஜ ராஜ சோழனை வைத்து புனைவாக உருவாக்கிய நாவல் தான் பொன்னியின் செல்வன். இதிகாசங்களுக்கு இணையாக உள்ள இந்த நாவலை படமாக்க எம்.ஜி.ஆர் முதல் பல பிரபலங்கள் முயற்சித்து வந்த நிலையில், அந்த கனவு படைப்பை சாத்தியமாக்கி உள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

படப்பிடிப்பு நிறைவு

படப்பிடிப்பு நிறைவு

நடிகர் ஜெயம் ரவி, ரகுமான் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் தங்கள் போர்ஷன் முடிந்து விட்டதாக சமீபத்தில் ட்வீட்களை பதிவிட்டு வந்தனர். கடைசியாக நடிகர் கார்த்தியும் தனது பங்கை முடித்து விட்டதாகக் கூறி சர்தார் மற்றும் விருமன் படங்களில் நடிக்க தயாராகி விட்டார். இந்நிலையில், ஒட்டுமொத்த முதல் பாக படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

மேலும், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்கிற அட்டகாசமான அறிவிப்பையும் படக்குழு அறிவித்துள்ளது. #PonniyinSelvan ஹாஷ்டேக் உடனடியாக டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடும் போட்டி

கடும் போட்டி

அடுத்த ஆண்டு சம்மருக்கு ஏகப்பட்ட பெரிய படங்கள் வெயிட்டிங்கில் உள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படமும் போட்டி போட ரெடியாகி விட்டது. கேஜிஎஃப் சாப்டர் 2, விஜய்யின் பீஸ்ட், ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்கள் 2022 கோடை விடுமுறையில் தான் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி

பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி

பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன் அருள் மொழி வர்மன் எனும் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி இந்த படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இரு பாக படப்பிடிப்பையும் முடித்து விட்டதாக அறிவித்த ஜெயம் ரவி இயக்குநர் கல்யாண் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஹேர்கட் பண்ணிட்டு ரெடியாகிட்டார்.

வந்தியத்தேவனாக கார்த்தி

வந்தியத்தேவனாக கார்த்தி

விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்ட வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க மறுத்த நிலையில், நடிகர் கார்த்தி அந்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். ஜெயம் ரவியை தொடர்ந்து அவரும் தனது போர்ஷனை முடித்து விட்டதாக போட்ட ட்வீட் செம வைரலாகி வருகிறது.

நந்தினி யார்

நந்தினி யார்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் நந்தினி கதாபாத்திரம் தான் ஹைலைட்டே. அந்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார். ஏற்கனவே இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இருவர், குரு, ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஸ்வர்யா மீண்டுமொருமுறை மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ளார்.

இரண்டாவது பாகம் எப்போ

இரண்டாவது பாகம் எப்போ

இரு பாகங்களுக்கான படப்பிடிப்பையும் பெருமளவில் முடித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். முதல் பாகம் அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியாக உள்ள நிலையில், இரண்டாம் பாகத்தை தீபாவளிக்கே வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. முதல் பாகத்தின் பிசினஸ் பொறுத்தே இரண்டாம் பாகத்தை திட்டமிட்டு படக்குழு வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X