முழுதாக வந்தியத்தேவனாக மாறிய நடிகர் கார்த்தி.. வீடியோ வெளியிட்ட தயாரிப்பு தரப்பு!
சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது பொன்னியின் செல்வன் படம்.
இந்தப் படத்தில் வந்தியத்தேவனாக நடித்து அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகர் கார்த்தி. இதனிடையே படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாக உள்ளது.
படத்தின் பிரமோஷன்கள் முழுவீச்சில் விரைவில் துவங்கவுள்ள நிலையில், தயாரிப்பு தரப்பு படத்தின் அடுத்தடுத்த வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறது.

பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்திருந்த படம் பொன்னியின் செல்வன். இந்தப் படம் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு ப்ராஜெக்டாக கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி இந்தப் படம் வெளியானது. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நல்ல விமர்சனங்களை மட்டுமில்லாமல் வசூலிலும் மிரட்டியது.

பொன்னியின் செல்வன் 2 படம்
இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங்கை முதல் பாகத்துடனேயே முடித்துவிட்டார் மணிரத்னம். முதல் பாகம் வெளியாகும்போதே இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இந்தப் படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தற்போது முதலே படத்தின் பிரமோஷன் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு த்ரிஷா குந்தவையாக மாறியதன் பின்புலத்தை தயாரிப்பு தரப்பு வெளியிட்டது.

கார்த்தி வந்தியத்தேவனாக மாறிய தருணம்
இந்நிலையில் தற்போது படத்தின் அடுத்த முக்கியமான கேரக்டரான வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி எப்படி தன்னுடைய கேரக்டருக்கான மாறினார். அதில் படக்குழுவினரின் உழைப்பு உள்ளிட்ட விஷயங்கள் பகிரப்பட்டுள்ளன. இந்தக் கேரக்டருக்காக மற்றும் அதன் காஸ்ட்யூமிற்காக பின்னணியில் செய்யப்பட்ட பணிகள் குறித்து இந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கேரக்டர் குறித்து நடிகர் கார்த்தியும் வீடியோவில் பேசியுள்ளார்.

பொன்னியின் செல்வன் பர்ஸ்ட் சிங்கிள்
இந்தப் படத்தின் முதல் பாடல் வரும் 20ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் படத்தின் முதல் பாகத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிரட்டலாக அமைந்த நிலையில், தற்போது இரண்டாவது பாகத்தின் இசையிலும் இசைப்புயல் மிரட்டியிருப்பார் என்று எதிர்பார்க்கலாம். முதல் பாடலை வரவேற்க ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

குந்தவை கேரக்டர் வீடியோ
முன்னதாக நடிகை த்ரிஷா, குந்தவையாக மாறிய அழகான தருணம் மற்றும் அவருக்கான காஸ்ட்யூம் குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. அவருக்கு பயன்படுத்தப்பட்ட நகைகள் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் பகிரப்பட்டன. இந்நிலையில் தற்போது வந்தியத்தேவனின் உடைகள், அணிகலன்கள் அவருக்கு செய்யப்பட்ட பிரத்யேக மேக்கப் உள்ளிட்ட விவரங்கள் இந்த வீடியோவில் காணக்கிடைக்கின்றன.

மீண்டும் பிரமோஷனல் டூர்?
முதல் பாகத்தை போலவே தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கான பிரமோஷனை, பிரமோஷனல் டூராக கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் மேற்கொண்டர். சென்னையில் துவங்கிய பயணத்தை டெல்லி, மும்பை என விரிவுப்படுத்தினர். இந்நிலையில், அடுத்ததாக அதேபோல அவர்களின் பயணம் அதையுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











