Mani Ratnam: பொன்னியின் செல்வன் தேசிய விருதை வாழ்த்தாத ரஜினி கமல்.. வருத்தப்பட்ட மணி ரத்னம்!
சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் முக்கிய இயக்குநர் மணிரத்னம். இவரது திரை மொழிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களில், முதல் பாகத்திற்கு மட்டும் நான்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இவரது இயக்கத்தில் வெளியான பல படங்கள் இன்றைக்கும் சினிமா கல்லூரிகளில் சினிமா குறித்த விவாதங்களில் இடம் பெறும் அளவிற்கு தரமான படங்களாக இடம் பெற்று வருகின்றது. இந்நிலையி பொன்னியின் செல்வன் படத்திற்காக தேசிய விருது பெற்றதற்காக அவரை தமிழ் சினிமாவில் இருந்து யாரும் வாழ்த்தாதது அவரது மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக வலை பேச்சு குழு கூறியுள்ளது.
70வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மொழிக்குமான சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு இந்த ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் வெளியான படங்களில் பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு அதிக விருதுகள் வழங்கப்பட்டது. குறிப்பாக பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு சிறந்த தமிழ்படம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை படத்தின் இயக்குநர் மணி ரத்னம் பெற்றுக்கொண்டார். அப்போது நடிகை குஷ்பு எழுந்து நின்று கைதட்டினார்.

பொன்னியின் செல்வன் படம் கடந்த 2022ஆம் ஆண்டு இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படத்தின் கதை அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை மைய்யமாகக் கொண்டு இரண்டு பாகங்களாக வெளி வந்தது. இதில் முதல் பாகம் 2022ஆம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2023ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தினை லைகா புரெடக்ஷன்ஸ் நிறுவனமும் மணி ரதனத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தது.

படக்குழு: இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஷோபிதா, பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வெளியானது. இதில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி நடித்தார். இந்தப் படம்தான் இதுவரை தமிழில் உருவான படங்களிலேயே அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம். இந்தப் பட்த்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்தார். அதேபோல் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்தார்.

தேசிய விருது: மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமுமே திரண்டு இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்நிலையில் 2022ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. அதில் பொன்னியின் செல்வன் படத்திற்கு சிறந்த தயாரிப்பாளர், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பின்னணி இசைகோர்ப்பாளர் ஆகிய பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது.

வருத்தம்: விருது பெற்றுக்கொண்ட பின்னர் இந்த விருதினை யாருக்கு சமர்பிக்க நினைக்கின்றீர்கள் என பத்திரிகையாளர்கள் மணி ரத்னத்திடம் கேட்கும்போது, யாருக்கும் கிடையாது எனக்கு மட்டுமே எனக் கூறினார். இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர்களான வலைபேச்சு குழுவினர், மணி ரத்னம் குறித்து தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில், தேசிய விருது பெற்றதற்காக அவரை யாருமே பொது வெளியில் வாழ்த்தவில்லை என மணி ரத்னம் வருத்தப்பட்டதாகவும், இதுவே தெலுங்கு திரையுலகமாக இருந்திருந்தால், அனைவரும் பாராட்டியிருப்பார்கள் எனக் கூறி அவருடைய நெருங்கிய வட்டத்தில் சொல்லி வருத்தப்பட்டார் எனக் கூறியுள்ளார்கள்.



Click it and Unblock the Notifications











