அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீசர் எப்படி இருக்கு தெரியுமா?

சென்னை: பண்டைக் காலத்து பறையொலி இசை முழங்க பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா சற்று முன் தொடங்கி உள்ளது.

Recommended Video

வெளியானது Ponniyin Selvan Part 1 Teaser... கொண்டாடத்தில் ரசிகர்கள்

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியில் பொன்னியின் செல்வன் டீசர் காட்சியே வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

டீசரை பார்த்த ரசிகர்கள் இயக்குநர் மணிரத்னம் பண்ணி வைத்திருக்கும் வேலையை பார்த்து மெய்சிலிர்த்து போயுள்ளனர்.

பொன்னியின் செல்வன் டீசர் லீக்

பொன்னியின் செல்வன் டீசர் லீக்

இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீசர் இன்று மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக 5 மொழிகளில் 5 திரை பிரபலங்களை கொண்டு ரிலீஸ் செய்யப் போவதாக லைகா நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியாகி உள்ளது. தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அந்த டீசரை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

பிரம்மாண்டத்தின் உச்சம்

பிரம்மாண்டத்தின் உச்சம்

பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை பார்த்து ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்த நிலையில், தற்போது லீக் ஆகி உள்ள பொன்னியின் செல்வன் டீசரை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் இயக்குநர் மணிரத்னத்தை மனதார பாராட்டி வருகின்றனர். இயக்குநர் மணிரத்னம் எடுத்த படங்களிலேயே இவ்வளவு வேகமான படமாக பொன்னியின் செல்வன் தான் இருக்கும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஃபிரேமும் வெறித்தனம்

ஒவ்வொரு ஃபிரேமும் வெறித்தனம்

சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜை காட்டுவதில் தொடங்கி, ஐஸ்வர்யா ராயும் த்ரிஷாவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் காட்சி, வந்தியத்தேவனாக வரும் கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரமின் வெறித்தனமான காட்சிகள் மற்றும் பொன்னியின் செல்வனின் போர்க் காட்சி என டீசர் முழுக்க ஃபயராகவே உள்ளது. படம் முழுக்க இதே போன்று க்ரிப்பாக இருந்தால் நிச்சயம் பான் இந்தியா பந்தயம் அடிக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

டீசர் வெளியீட்டு விழா ஆரம்பம்

டீசர் வெளியீட்டு விழா ஆரம்பம்

பண்டைக் காலத்து பறை இசை முழங்க இயக்குநர் மணிரத்னம் நிகழ்ச்சிக்கு வருகைத் தரும் காட்சிகள் தற்போது யூடியூப்களில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. இன்று மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் அதிகாரப்பூர்வ டீசரை இந்தியில் அமிதாப் பச்சன், தமிழில் சூர்யா, மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் மகேஷ் பாபு மற்றும் கன்னடத்தில் சார்லி 777 பட ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டி உள்ளிட்டோர் வெளியிட உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X