பொன்னியின் செல்வன்… கம்பீரமான “குந்தவை“யாக மாறும் கீர்த்தி சுரேஷ்!
சென்னை: மணிரத்னம் இயக்குனர் பொன்னியினி செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷின் குந்தவை கதாபாத்திரத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் என மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன்
கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வனை எத்தனை முறை படித்தாலும் ரசிக்காமல் இருக்க முடியாது. அத்தகைய நாவலை படமாக்கி, அத்தனை கதாபாத்திரத்திற்கும் உயிரூட்டி வருகிறார் இயக்குனர் மணிரத்னம்.

படப்பிடிப்பு நிறுத்தம்
பொன்னியின் செல்வன் படத்தின் முதற்கட்ட கட்ட படப்பிடிப்பு மார்ச்சில் முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வட மாநிலங்களில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். தற்போது, அங்கு கொரோனா தீவிரமடைந்துள்ளதால், படப்பிடிப்பு இடத்தை மாற்றியுள்ளார் மணிரத்னம்.ஜுனில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வந்தியத்தேவனாக கார்த்தி
இந்த வரலாற்று திரைப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, கீர்த்தி சுரேஷ், விக்ரம் பிரபு உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும், கம்பீரமான குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், நந்தினியாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

குந்தவை
இந்நிலையில் சமூகவலைத்தளப்பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் குந்தவை கதாபாத்திரத்தின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











