எம்.ஜி.ஆர் மகனாக மாறிய சசிகுமார் - இயக்கும் பொன்ராம்

சென்னை: இயக்குனர் பொன்ராம் நடிகர் சசிகுமாரை வைத்து இயக்கும் அடுத்த திரைப்படத்திற்கு எம்.ஜி.ஆர் மகன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இப்படத்தில் சசிகுமாருடன் சத்யராஜும் இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சசிகுமார் சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்களை இயக்கிய பிறகு வேறு எந்த திரைப்படமும் இயக்கவில்லை. சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் அவருடைய நடிப்பை பார்த்து பல வாய்ப்புகள் அவரை தேடிவந்தது. அதை பயன்படுத்தி அவர் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

Ponram directs M.G.R Magan Movie starring Sasi Kumar

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினி மேடையில் பேசியபோது, நடிகர் சசிகுமார் நடிப்பை பார்த்து வியந்து பேசினார். அதோடு, அவர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்றும் தற்போதைக்கு படம் எதுவும் இயக்க வேண்டாம் என்று கூறினார். அதனாலும் கூட சசிகுமார் படங்களை இயக்குவதில் விருப்பமில்லாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதற்கு காரணமாக இருக்கலாம்.

நடிப்பிற்கு முக்கியத்துவம்

பாகுபலி திரைப்படம் வெளியான சமயம், சசிகுமாரும் தன்னிடம் இது போல ஒரு ராஜா காலத்து கதை ஒன்று இருக்கிறது, அதை விரைவில் இயக்கப்போவதாக கூறினார். ஆனால் நடிப்பதற்கு தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களாக வருவதால் நடிப்பை கைவிட மனசில்லை.

கென்னடி கிளப்

Ponram directs M.G.R Magan Movie starring Sasi Kumar

இவர் கடைசியாக நடித்த கென்னடி கிளப் திரைப்படம், பெண்கள் கபடி போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம். இத்திரைப்படம் வெகு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது சசிகுமார் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் பொன் ராம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற திரைப்படங்களை இயக்கியவர் பொன்ராம். தற்போது அவர் நான்காவது திரைப்படத்தை இயக்கி வருகிறார். முதல் மூன்று படங்களையும் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய பொன்ராம், இந்த முறை இயக்குனரும், நடிகருமான சசிகுமாரை வைத்து இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு எம்.ஜி.ஆர் மகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் சசிகுமாருடன் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். வரும் நவம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X