ஹரிஷ் முகத்தைப் பார்த்தால் ஷாரூக் ஞாபகம் வருகிறது: பிரபல நடிகர் பாராட்டு
ஹரிஷ் கல்யாணைப் பார்த்தால் ஷாருக்கான் ஞாபகம் வருவதாக நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஹரிஷ் கல்யாண் முகத்தை பார்க்கும் போது ஷாருக்கான் முகம் தான் நினைவுக்கு வருகிறது என்று நடிகர் பொன்வண்ணன் பாராட்டியுள்ளார்.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள படம் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும். இப்படத்தில் பொன்வண்ணன், பாலசரவணன், மாகாபா அனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பொன்வண்ணன், ஹரிஷ் கல்யாணை ஷாருக்கானுடன் ஒப்பிட்டு பேசினார். இதுகுறித்து அவர் பேசியதாவது,
"இந்த படத்தில் நானும் ஹரிஷ் கல்யாணும் நிறைய காட்சிகளில் சேர்ந்து நடித்துள்ளோம். இருவருக்கும் எமோஷனலான காட்சிகள் தான் இருக்கும்.
ஹரிஷை நேரில் பார்க்கு போது சாதாரணமாக தான் இருக்கிறது. ஆனால் திரையில் பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இந்த முகத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் தோன்றியது.
ஹரிஷை நேரில் பார்க்கும் போது சாதாரணமாக தான் இருக்கிறது. ஆனால் திரையில் பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இந்த முகத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் தோன்றியது.


Click it and Unblock the Notifications











