பூ வாடலாம்..பாசம் மாறாது..நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து உருகிய ரவீந்தர்!

சென்னை : சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

செப்டம்பர் 1ந் தேதி நடந்து முடிந்த இவர்களுடைய திருமணம் 28 நாட்களை கடந்த பின்பும் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இவர்கள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் இவற்றை அனைத்தையும் கண்டுகொள்ளாமல் இருவரும் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உருகி உருகி காதலை பகிர்ந்து வருகின்றனர்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மகாலட்சுமி திருமணம் திருப்பதியில் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இவர்களின் திருமண போட்டோவை ரவீந்திரன் வெளியிட்டது அது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் டிராண்டானது. அந்த வாரம் முழுவதும் இருவரின் திருமணம் குறித்து அனைவரும் பேசி பேசி களைத்துப் போனார்கள்.

பரபரப்பான பேட்டி

பரபரப்பான பேட்டி

இதையடுத்து, இவர்கள் இருவரும் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து, இன்னும் பிரபலமானார்கள். நானும் மகாலட்சுமியும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தோம். அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தோம் ஆனால், மகாலட்சுமி, தலை தீபாவளிக்காக இந்த மாதம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார். அதனால், தற்போது திருமணம் நடந்துள்ளது இது அவசரப்பட்டு நடந்த திருமணம் இல்லை.

வந்தாள் மகாலட்சுமி

வந்தாள் மகாலட்சுமி

இதையடுத்து, விஜய் தொலைக்காட்சியில் வந்தாள் மகாலட்சுமி என்ற பெயரில் புது வித நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சியில், புதுமண தம்பதிகளான மகாலட்சுமியும் ரவீந்திரனும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில், அவர்களுக்கு பலவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது.

ஐ லவ் யூ மகாலட்சுமி

ஐ லவ் யூ மகாலட்சுமி

இரண்டு பேரில் அதிகம் ஐ லவ் யூ சொன்னது யார் என்ற கேள்விக்கு, மகாலட்சுமி அவர் ஐ லவ் யூ சொல்லவே மாட்டாரு நான் தான் சொல்லுவேன் என்றார். இதையடுத்து, ரவீந்திரன் இதுவரை மகாலட்சுமி ஷங்கர் உன்னை பார்த்துக்கொண்டார் இனி மகாலட்சுமி ரவீந்திரன் பத்திரமாக பார்த்துக்கொள்வேன் ஐ லவ் யூ என்றார்.

பூ வாடலாம் பாசம் மாறாது

பூ வாடலாம் பாசம் மாறாது

இதையடுத்து பரிசு கொடுக்கும் டாஸ்க்கில் மல்லிப்பூவை கையில் கொடுக்க, அதை பார்த்த ரவீந்திரன் இந்த பூ வாடலாம் உன் மீது வைத்திருக்கும் பாசம் மாறாது என்று கூறியுள்ளார். மேலும், கனமான கொலுசை பரிசாக கொடுக்க புவி ஈர்ப்பு விசைக்கு தெரியாது என் பாதம் எவ்வளவு கனத்தை தாங்கும் என்று கவிதை கவிதையா பேசி உள்ளார். ப்ரோமோவே இப்படி என்றால் மெயின் பிக்ஸர் சும்மா அதிரும் போல என 90ஸ் கிட்டு இளசுகள் ஏக்கத்துடன் இந்த வீடியோவை பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி அக்டோபர் 2ந் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X