»   »  பொறி பறக்கும் பூஜா!

பொறி பறக்கும் பூஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொறி படத்திற்காக பூஜாவும், ஜீவாவும் பொறி பறக்க ஆடிய ஒரு சூப்பர் ஆட்டம் கோல்கொண்டாவில்சமீபத்தில் படமாக்கப்பட்டது.

ஜீவா ஜோடியாக பூஜா நடித்து வரும் படம் பொறி. ஈக்கு முன்பே இது வந்திருக்க வேண்டும். ஆனால் ஈ யைமுடித்து விட்டு வருவதாக கிளம்பிப் போன ஜீவா, சொன்னபடி ஈ யை விரட்டி விட்டு விட்டு இப்போதுபொறிக்கு வந்துள்ளார்.

சுப்ரமணியம் சிவாதான் இப்படத்தை இயக்குகிறார். திருடா திருடி இயக்குநரும் இவர்தான். சமீபத்தில்கோல்கொண்டா கோட்டையில் ஒரு அட்டகாசமான ஃபாஸ்ட் பீட் பாட்டை படமாக்கினர். திருடா திருடியில்தனுஷையும், சாயா சிங்கையும் கோலார் தங்கச் சுரங்கத்தில் மன்மத ராசா பாட்டுக்கு படு வேகமாக ஆட வைத்தடான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்தான் இந்தப் பாட்டுக்கும் மாஸ்டர்.

பூஜாவையும், ஜீவாவையும் பம்பரமாக சுழற்றி விட்டு படு வேகமாக ஆட வைத்து அசத்தியுள்ளாராம் சிவசங்கர்.பாட்டின் வரிகளும் அதற்கேற்ப அணல் பறக்கும் வகையில் உள்ளது.

வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு
வெட்க தேவதையும் கூட வந்து ஆடுச்சு
பாதாள பைரவியும் தேடுச்சு
பட்டு பாவாடையும் மோகம் கொண்ட ஓடுச்சு என்று ஆரம்ப வரிகளிலேயே அமர்க்களப்படுத்தியுள்ளார் கவிஞர்
யுகபாரதி.

தினாவின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாட்டுக்காக பூஜா படு பரவசமாக ஆடிக் கலக்கியுள்ளாராம்.ஜீவாவுக்குப் போட்டியாக பூஜாவின் பப்பளக்கா நடனம், யூனிட் முழுவதையும் அசர வைத்து விட்டதாம்.

மன்மத ராசா பாட்டு போல இந்தப் பாட்டும் சூப்பர் ஹிட் ஆகும் என இப்போதே யூனிட் ஆட்கள் கையில்அடித்துச் சத்தியம் செய்கின்றனர்.

பொறி பட ஷூட்டிங் தாமதமானதால் இடையில் கிடைத்த கேப்பை வைத்து இலங்கை சென்று அஞ்சலிகா என்றசிங்களப் படத்தில் நடித்து முடித்தார் பூஜா. அதை முடித்து விட்டு திரும்புவதற்கும், பொறி ஆரம்பிப்பதற்கும்சரியாக இருந்ததால் இப்போது பொறியில் தீவிரமாக நடித்து வருகிறாராம்.

இதை முடித்து விட்டு இன்னொரு சிங்களப் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அதை முடித்து விட்டு மறுபடியும்தீவிரமாக தமிழ்ப் படங்களில் நடிக்கப் போகிறாராம்.

பூஜா நடித்துள்ள ஓரம்போ (ஆட்டோ) படமும் ரிலீஸுக்குத் தயாராகி விட்டது. இதனால் மீண்டும் ரசிகர்களைசந்திக்கும் ஆர்வத்தில் இருக்கிறார் பூஜா.

வெல்கம் பேக் பூஜா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil