»   »  பிரியாணி விற்கும் பூஜா!

பிரியாணி விற்கும் பூஜா!

Subscribe to Oneindia Tamil

ஆர்யா-பூஜா நடிக்க ஆட்டோ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட படத்தின் டைட்டிலை ஓரம் போ என்றுமாற்றிவிட்டார்கள். எல்லாம் தமிழ்ப் பெயர்களுக்கு கேளிக்கை வரி விலக்கு படுத்தும் பாடு தானாம்.

இந்தப் படத்தை இயக்குவது புஷ்கர்-காயத்ரி என்ற இருவர். இருவரும் கணவன்-மனைவி என்பது தான் இதில்விஷேசம். அமெரிக்காவில் சினிமா தயாரிப்பு குறித்த கோர்ஸை படித்துவிட்டு, சில குறும் படங்களையும்தயாரித்துப் பார்த்து டிரெயின் ஆகிவிட்டுத் தான் இந்த ஜோடி கோலிவுட்டுக்குள் நுழைந்திருக்கிறது.

சென்னையில் வந்து படத் தயாரிப்பில் இறங்கி பழனிவேல், ஆனந்தன் என இரு தயாரிப்பாளர்களையும்பிடித்துவிட்டார்கள். முதலில் ஆர்யாவையும் பின்னர் பூஜாவையும் புக் செய்த இந்த தம்பதி இசையமைக்கபிரகாஷ் குமாரை பிடித்துப் போட்டுவிட்டது. சமீபத்தில் வெளியான வெயில் படத்தில் பின்னி எடுத்தவர் தான்இந்த பிரகாஷ்.

இரவில், ஊர் அடங்கிய பின்னர் சென்னையில் சில இடங்களில் ஆட்டோ ரேஸ் நடப்பது உங்களில் எத்தனைபேருக்குத் தெரியுமோ தெரியாது. பெட்டிங் வைத்து நடக்கும் ஆட்டோ ரேஸை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்தப் படமாம்.

பகலில் ஆட்டோ ஓட்டிவிட்டு இரவில் ஆட்டோ ரேஸ்களில் பங்கேற்கும் ஒரு கரடுமுரடு இளைஞனாக ஆர்யாநடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஆட்டோகாரராகவே மாறிவிட்டார் ஆர்யா என்கிறார்கள்.

அவருக்கு ஜோடியாக சேரிப் பெண்ணாக நடிக்கும் பூஜாவுக்கு இதில் மேக்-அப்பே கிடையாதாம். மிக இயல்பானஅழகில், சேலைகளில் வந்து போகும் பூஜா இதில் தள்ளுவண்டியில் பிரியாணி விற்கும் பெண்ணாக நடிக்கிறார்.

திருவல்லிக்கேணியில் தான் பூஜா பிரியாணி விற்பதாக காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.

பூஜாவுக்கு மேக்-அப்பே தேவையில்லை. இயல்பிலேயே அவ்வளவு அழகு, நடிப்பிலும் அசத்தி எடுக்கிறார்என்கிறார் இயக்குனர் காயத்ரி.

Read more about: pooja and aryas oram po
Please Wait while comments are loading...