»   »  ஆட்டோவுக்குள் பூஜா லூட்டி!

ஆட்டோவுக்குள் பூஜா லூட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஓரம்போ படத்தில் பூஜாவும், ஆர்யாவும் ஆட்டோவுக்குள் ரொமான்ஸ் பண்ணும் காட்சியை வியர்க்கவிறுவிறுக்க எடுத்துள்ளார்களாம்.

பட்டியல் படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து பூஜா நடித்திருந்தாலும், இருவரும் ஜோடி போட்டு நடித்துள்ள படம்ஆட்டோ. இப்படத்தின் பெயரை இப்போது ஓரம்போன சென்னைத் தமிழுக்கு மாற்றி விட்டனர்.

படத்தை புஷ்கர்-காயத்ரி இயக்குகின்றனர். இவர்கள் இருவரும் கணவன், மனைவி. படத்தில் ஆட்டோடிரைவராக வருகிறார் ஆர்யா. இதற்காக நன்றாகவே ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டாராம். பெரும்பாலானகாட்சிகளில் இவரேதான் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

சண்டை காட்சிகளில் தான் டூப் போடுகிறார்களாம்.

ஆர்யா ஆட்டோ ஓட்டும்போது சேதமடைந்து விட்டால், உடனே வேறு ஆட்டோவை பயன்படுத்துவதற்காகசெட்டில் எப்போதும் நான்கு ஆட்டோக்களை ஸ்பேர் ஆக வைத்துத்தான் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இப்படத்தில், பூஜா படு வித்தியாசமான கேரக்டரில் வருகிறார். சேரியில் வாழும் ஏழை பெண்ணாக நடிப்பில்அசத்தியுள்ளாராம் பூஜா. பிரியாணி செய்து விற்கும் பெண்ணாக நடிக்கிறார்.

படத்தின் பிரதான விசேஷம், பூஜா விற்கும் பி>யாணி இல்லை, அவரும், ஆர்யாவும் சேர்ந்து ஆட்டோவுக்குள்ஜாலி பண்ணும் காட்சிதானாம். ஆட்டோவுக்குள் இரண்டு பேர் சேர்ந்து உட்கார்ந்தாலே மூச்சு மூட்டும். இதில்அத்தணூண்டு இடத்திற்குள் ரொமான்ஸ் செய்தால் எப்படி இருக்கும்?

அந்தக் காட்சியை படு பிரமாதமாக படமாக்கியுள்ளார்களாம். ஆட்டோ டிரைவருக்கு அவரது ஆட்டோதானேசொர்க்கம்? அதனால்தான் ஆட்டோவுக்குள் பூஜாவும், ஆர்யாவும் ரொமான்ஸ் பண்ணுவது போன்ற காட்சியைசெட் செய்தோம் என்கிறார் காயத்ரி.

பூஜாவும் இதுவரை இல்லாத அளவுக்கு படு நெருக்கமாக ஆர்யாவுடன் ஆட்டோவுக்குள் பின்னிப்பிணைந்துள்ளாராம். இதில் காதல்தான் வெளிப்படுமே தவிர காமம் சற்றும் தெரியாது என்று விளக்கம்தருகிறார்கள் புஷ்கரும், காயத்ரியும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil