»   »  சிங்களர்களை கவர்ந்த பூஜா

சிங்களர்களை கவர்ந்த பூஜா

Subscribe to Oneindia Tamil
பூஜாவை சிங்ஒகளர்களுக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம். அவர் நடித்தசிங்களப் படமான அஞ்சலிக்கா அங்கு ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கொங்கணித் தாய்க்கும், சிங்களத் தந்தைக்கும் பிறந்தவர்தான் நம்ம பூஜா. ஆனால்பச்சைத் தமிழச்சி போல சுத்தத் தமிழில் பேசி அசத்துவார்.

தமிழில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமான பூஜாவின் பூர்வீகம் இலங்கைக்கும் பரவஅங்கிருந்த தயாரிப்பாளர்கள் 'நம்ம' படத்திலேயும் நடியுங்களேன் என்று அன்புக்கோரிக்கை வைத்தனர்.

இதைத் தட்ட முடியாத பூஜாவும், தந்தை மொழியான சிங்களத்தில் அஞ்சலிக்கா என்றபடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தார்.

அந்த அஞ்சலிக்கா கடந்த வாரம் இலங்கையில் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்திற்கு நல்லவரவேற்பாம். சிங்களர்களிடையே பூஜாவுக்கு செம வரவேற்பு கிடைத்துள்ளதாம்.நம்ம ஊர்ப் பொண்ணு, தமிழ் நாட்டில் பெரிய ஆளாக இருக்கிறதாமே என்றுவியந்தபடி பூஜாவை ரசிக்க வருகிறார்களாம் சிங்கள ரசிகர்கள்.

பூஜாவுக்கு கிடைத்துள்ள இந்த திடீர் வரவேற்பைப் பார்த்த சில விளம்பரநிறுவனங்கள், தங்களது விளம்பரப் படங்களில் நடிக்க வருமாறு பூஜாவுக்கு அழைப்புவிடுத்துள்ளன.

நல்ல டப்பும் தருவதாக கூறவே, ஓ.கே. சொன்ன பூஜா கொழும்புக்குப் பறந்துபோயுள்ளார்.

தமிழகத்தில் பிரபலமாக உள்ள ஒரு நடிகை, சிங்கள மொழி விளம்பரத்தில் நடிப்பதுஇதுவே முதல் முறை என்கிறார்கள். அது சரி, சிங்களத் தொடர்பு இருப்பதால்தானேகூப்பிட்டிருக்கிறார்கள், இல்லாவிட்டால் சீந்தியிருப்பார்களா?

சிங்களத்தை அரவணைக்கட்டும், ஆனால் மடி கொடுத்த தமிழை மறந்துடாதீங்க பூஜா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil