காதலரை ரகசியமாக மறுமணம் செய்த அஜித் பட நடிகை

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை பூஜா பட்ரா நடிகர் நவாப் ஷாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகை பூஜா பட்ராவும், நடிகர் நவாப் ஷாவும் காதலித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். பூஜாவும், நவாப் ஷாவும் காதலிப்பது அவர்களின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் கடந்த மாதம் தான் தெரிய வந்தது.

இந்நிலையில் சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பூஜா பட்ரா

பூஜா பட்ராவும், நவாப் ஷாவும் விரைவில் திருமணத்தை பதிவு செய்யப் போகிறார்களாம். திருமணமானதை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார் நவாப் ஷா. இந்த கதையை வைத்து ஒரு படமே எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார் நவாப் ஷா.

வாழ்க்கை துணை

திருமணத்திற்கு தயாராக 46 ஆண்டுகள் ஆனது அதன் பிறகு சரியான நபர் வந்தார் என்று முன்பு நவாப்ஷா இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார். மேலும் தான் பூஜாவுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

கோவா

மனைவி பூஜாவுடன் கோவாவுக்கு சென்றுள்ளார் நவாப் ஷா. அங்கு எடுத்த புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பூஜாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். முன்னதாக அவருக்கும் டாக்டர் சோனு அலுவாலியாவுக்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு பூஜா கணவருடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். பின்னர் 2010ம் ஆண்டு பூஜாவும், சோனுவும் பிரிந்துவிட்டனர். இதைடுத்து 2011ம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றார் பூஜா.

அஜித்

அஜித்

அஜித்தின் ஆசை படம் மூலம் நடிகையானவர் பூஜா. அந்த படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்தார். சரத்குமாரின் ஒருவன் படத்தில் நடித்த பூஜா கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்தை ஒருதலையாக காதலித்தவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்த பூஜா தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நவாப் ஷா சல்மான் கானின் டைகர் ஜிந்தா ஹை, பாக் மில்கா பாக், தில்வாலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சல்மான் கானின் தபாங் 3 படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X