'எங்கப்பா 4 கல்யாணம் பண்ணினார்..அற்புதமான பெண்களை மணந்தார்.. 2வது திருமணத்துக்கு ரெடியாகும் நடிகை!

By

மும்பை: இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கும் பிரபல நடிகை, அதனால் தன் குழந்தைகளுக்கு பாதிப்பில்லை என்று கூறியுள்ளார்.

Recommended Video

பாலாவிற்கு பிடித்த பிரியமானவள் • நான் கடவுள் Pooja

பிரபல இந்தி நடிகை பூஜா பேடி. நடிகர் கபீர் பேடியின் மகளான இவர், சில படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள பூஜா பேடி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

கடந்த 1990 ஆம் ஆண்டில் பர்ஹான் இப்ராஹிம் பர்னிச்சர்வாலா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அலயா பர்னிச்சர்வாலா என்ற மகளும் ஒமர் இப்ராஹிம் என்ற மகனும் உள்ளனர். அலியா, சைஃப் அலிகான் நடித்த ஜாவாலி ஜானேமான் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆனது

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

2003 ஆம் ஆண்டில், பூஜாவும் பர்ஹானும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். பின்னர் முறைப்படி விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் கடந்த வருடம், மானெக் கான்ட்ராக்டர் என்பவர் மீது காதல் கொண்டார். மானெக்கின் காதலை ஏற்றுக்கொண்டதாகக் கூறியிருந்த பூஜா, ட்விட்டரில் தாங்கள் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும் கூறி இருந்தார்.

தந்தை கபீர் பேடி

தந்தை கபீர் பேடி

இந்நிலையில் தனது அடுத்த திருமணம் பற்றி பூஜா பேடி கூறியிருப்பதாவது: அனுபவங்கள் வாழ்க்கையை கசப்பானதாக அல்ல, சிறப்பானதாக மாற்ற வேண்டும். ஒரு திருமணம் சரியாக அமையவில்லை என்றால் மற்றொரு திருமணம் தேவையில்லை. எனது தந்தை கபீர் பேடி, 4 திருமணம் செய்துகொண்டார். சில அற்புதமான பெண்களை அவர் மணந்தார். அதன் மூலம் எங்களுக்கு சிறந்த சித்திகள் கிடைத்தார்கள்.

குழப்பவில்லை

குழப்பவில்லை

அந்த திருமணங்கள் அவரை வலிமையாக்கின. எனது குழந்தைகள் மானெக்கை விரும்புகிறார்கள். அவர்கள் என்னிடம், அப்பாவை (பர்ஹான் பர்னிச்சர்வாலா) பாருங்கள், அவர் லைலா ஆன்டியை திருமணம் செய்துகொண்டார், அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று சொல்கிறார்கள். எனது முந்தைய உறவுகளால் அவர்களுக்குப் பாதிப்பில்லை. இதையும் அவர்களையும் குழப்பிக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X