சூர்யாவிற்கு இனி நல்ல நேரம் தான்.. சூர்யா 46 பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னை: சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்க உள்ள 'சூர்யா 46 ' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இப்படத்தில் சூர்யாவுடன் ராதிகா சரத்குமார், ரவீனா தண்டன், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட உள்ளது. 'சூர்யா 46 ' படத்தின் பணி இன்று தொடங்கி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பீட்சா, இறைவி, பேட்ட, மகான், ஜிகர்தண்டா போன்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ திரைப்படம் மே 1ந் தேதி வெளியானது. இந்த படத்தில் சூர்யா அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக மாஸ் காட்டி இருந்தார். வழக்கமாக ஒரு படத்தில் ஆறு ஏழு சண்டை காட்சிகள் தான் இருக்கும், ஆனால், இந்த படத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தின் மூலம் சூர்யா, ஒரு ஆக்ஷன் ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டதாக படம் பார்த்தவர்கள் சூர்யாவை கொண்டாடினார்கள். இப்படம் நல்ல வசூலை அள்ளியது. பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம், கருணாகரன், சுவாசிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Suriya Suriya 46 Venky Atluri 46

நடிகர் சூர்யா: ரெட்ரோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆன்மீகம் கலந்த கதையாக உருவாகி இப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்து வருகிறார். மேலும் திரிஷா, யோகி பாபு, ஸ்வாசிகா, ஷிவிதா,அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஆர் ஜே பாலாஜி என்ன வைத்திருக்கிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்த நிலையில் படத்திற்கு பேட்டைக்காரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Suriya Suriya 46 Venky Atluri 46

சூர்யா 46 பட பூஜை: சூர்யா 45 படத்தை படத்தை தொடர்ந்து வாத்தி , லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றிப்படத்தை கொடுத்த வெங்கி அட்லுரி இயக்கவுள்ள படத்தில் சூர்யா கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் போடப்பட்டு படப்பிடிப்பு பணிகள் தொடங்கி உள்ளது. தனித்துவமான கதை சொல்லுவதில் பெயர் பெற்ற வெங்கி அட்லூரி, தற்போது சூர்யாவுடன் கரம் கோர்த்து இருப்பதால் இப்படத்தின் மீதா எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இதில், பிரேமலு படத்தின் மூலம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக மாறிய மமீதா பைஜூ கதாநாயகியாக இணைகிறார். இவருடன் ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவு நிமிஷ் ரவி, படத்தொகுப்பு நவீன் நூலி, தயாரிப்பாளர்கள் எஸ். நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தியேட்டரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து இப்படம் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர். நீண்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படம் விரைவில் துவங்கும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X